“என் புருஷன் எந்நேரமும் அந்த மாதிரி உடையில், அதே நினைப்பில் இருக்கான்”.. என்னால இனிமேல் முடியாது… விவாகரத்து கேட்ட போலீஸ் மனைவி… அதிர வைக்கும் காரணம்…!

By Nanthini on தை 13, 2026

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் ஒரு நெகிழ்ச்சியான தொடக்கமும், எதிர்பாராத திருப்பமும் கொண்ட விவாகரத்து வழக்கு சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த கோவில் பூசாரி ஒருவர், தனது மனைவியின் லட்சியமான காவல் துறையில் சேர வேண்டும் என்ற கனவுக்கு உறுதுணையாக இருந்துள்ளார். மனைவியின் படிப்பு மற்றும் பயிற்சிக்காகத் தன் உழைப்பைச் செலவழித்து, அவரை ஒரு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக (SI) ஆக்கி அழகு பார்த்தார். ஆனால், தனது இலக்கை அடைந்த பிறகு அந்தப் பெண் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனது விவாகரத்து மனுவில் அந்தப் பெண் குறிப்பிட்டுள்ள காரணங்கள் மிகவும் விசித்திரமாக உள்ளன. தனது கணவர் ஒரு பூசாரி என்பதால் அவர் பின்பற்றும் பாரம்பரியமான நடைமுறைகள் தனக்குப் பிடிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். கணவர் எந்நேரமும் வேட்டி, அங்கவஸ்திரம் அணிந்திருப்பதும், குடுமி வைத்திருப்பதும், ஒரு பூசாரிக்கே உரிய பழமையான தோற்றத்தில் இருப்பதும் தனக்கு சங்கடத்தை ஏற்படுத்துவதாக அவர் கூறியுள்ளார். நவீனமான காவல் துறையில் பணியாற்றும் தனக்கு, கணவரின் இத்தகைய பழமையானத் தோற்றமும் வாழ்க்கை முறையும் ஒத்துப்போகவில்லை என்பது அவரின் வாதமாக உள்ளது.

   

கணவர் தனது தோற்றத்தை மாற்றிக்கொள்ள மறுப்பதால் அவருடன் வாழ முடியாது என அந்தப் பெண் பிடிவாதமாக உள்ளார். இருப்பினும், இந்தப் புகாரில் பெரிய சட்டப்பூர்வமான சிக்கலோ அல்லது குற்றச்சாட்டுகளோ இல்லை என்பதால், குடும்ப நல நீதிமன்றம் இருவருக்கும் கவுன்சிலிங் வழங்க அறிவுறுத்தியுள்ளது. மனைவியின் முன்னேற்றத்திற்காகத் தியாகம் செய்த கணவரை, வெறும் தோற்றத்திற்காகப் பிரிய நினைக்கும் மனைவியின் செயல் பலரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்றம் இந்த வழக்கில் சமரச முயற்சி மேற்கொண்டு வருவதால், இறுதி முடிவு இன்னும் எட்டப்படவில்லை.