“ஒரு இறப்புல மலர்ந்தது தான் எங்க காதல்”.. திருமணத்திற்குப் பிறகு முதல் முறையாக பேட்டியளித்த ஷாரிக் – மரியா தம்பதி..!

By Nanthini on ஐப்பசி 26, 2024

Spread the love

தமிழ் சினிமாவின் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தியவர் தான் ரியாஸ் தான். இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் இனியா தொடரில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் நடிகை உமாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். உமாரியாஸ் திரைப்பட நடிகை மட்டுமல்லாமல் தொலைக்காட்சி நடிகையாகவும் வலம் வருகிறார். இவர் பெரும்பாலான திரைப்படங்களில் வில்லி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வரும் நிலையில் இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ளன. அவர்களின் மூத்த மகனான சாரிக் ஹாசன் தற்போது சினிமா திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

Latest News Actor Riyaz Khan Son Shariq Hassan Wife Maria Jennifer Was A  Single Mother Before Marriage | ரியாஸ் கான் மருமகளுக்கு ஏற்கனவே இவ்வளவு  பெரிய மகளா வைரலாகும் புகைப்படம் Movies News ...

   

இந்த நிலையில் ஷாரிக் மரியா ஜெனிஃபர் என்பவரை காதலித்து வந்த நிலையில் காதலை பெற்றோரிடம் சொல்லி இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் கிறிஸ்துவ முறைப்படியும் இந்து முறைப்படியும் நடந்தது. இதில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இதனைத் தொடர்ந்து சமீபத்தில் கூட மரியாவும் ஷாரிக்கும் இணைந்து அளித்த பேட்டியில், மரியாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு மகள் உள்ளதாகவும் பிறகு சாரிக் இருவரையும் ஏற்றுக் கொண்டதாகவும் கூறியிருந்தார்.

   

Latest News Actor Riyaz Khan Son Shariq Hassan Wife Maria Jennifer Was A  Single Mother Before Marriage | ரியாஸ் கான் மருமகளுக்கு ஏற்கனவே இவ்வளவு  பெரிய மகளா வைரலாகும் புகைப்படம் Movies News ...

 

இந்நிலையில் ஷாரிக் மற்றும் மரியா சமீபத்தில் பிரபல யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தங்களுடைய காதல் கதை பற்றி பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர். அதில், முதலில் நான் மரியாவை பார்க்கும் போது சின்னதா ஒரு ஸ்மைல் பண்ண, ஆனா அவங்க சுத்தமா கண்டுக்காம போயிட்டாங்க. அப்பதான் நான் முடிவு பண்ணேன் இவங்கள தான் நான் கல்யாணம் பண்ண வேண்டும் என்று. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக பேசி இருவரும் பழகினோம். எந்நேரமும் மரியாவுடன் தான் நான் இருப்பேன். அப்படி ஒரு நாள் மரியாவுக்கு நெருக்கமான ஒருவர் இறந்து விட்டார். அந்த துக்கத்திலிருந்து மீள முடியாத துயரத்தில் இருந்தபோது மரியாவுடன் சாரிக் இருந்துள்ளார்.

நடிகர் ரியாஸ் கானின் மருமகள் யார்? ஷாரிக்கின் வருங்கால மனைவியின் போட்டோவை  வெளியிட்ட மாமியார் உமா | Actress Uma Riyaz Khan introduced her daughter in  law - Tamil Oneindia

அந்த சமயத்தில் மரியாவுக்கு அவர் மீது காதல் மலர உடனே ஐ லவ் யூ சாரிக் என்று கூறிவிட்டாராம். ஒருநாள் ஷாரிக் கனவில் மரியா வெள்ளை உடை அணிந்து கொண்டு இருவரும் திருமணம் செய்து கொள்வது போல கனவு கூட வந்துள்ளது. அதை மரியாவிடம் சென்று அவர் கூறியுள்ளார். பிறகு எந்த ஒரு சண்டை வந்தாலும் சாரிக் கட்டிப்பிடித்து மரியாவிடம் சாரி கேட்டு விடுவாராம். இவரை தவிர என்னையும் என் மகளையும் யாராலையும் இவ்வளவு நன்றாக பார்த்துக் கொள்ள முடியாது என்று மரியா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.