பாக்யராஜால் சாந்தணு மிஸ் பண்ணிய சூப்பர் ஹிட் படங்கள்.. அட இதெல்லாம் இவர் நடிக்க வேண்டியதா?

By vinoth

Published on:

தமிழ் சினிமாவில் 2008 ஆம் ஆண்டு வெளியான சக்கரக்கட்டி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் சாந்தணு. அதற்கு முன்பே குழந்தை நட்சத்திரமாக அவர் பாக்யராஜுடன் வேட்டிய மடிச்சுக்கட்டு படத்தில் நடித்திருக்கிறார். சக்கரக் கட்டி திரைப்படத்தில் ஏ ஆர் ரஹ்மான் இசையில் மிகப்பெரிய அறிமுகம் கிடைத்தாலும் அந்த படம் அவருக்கு வெற்றியைப் பெற்றுத்தரவில்லை.

அதன் பிறகு அவரும் 15 ஆண்டுகளாக எவ்வளவோ படங்களில் நடித்தாலும் அவரால் ஒரு வெற்றிப் படம் கூட கொடுக்க முடியவில்லை. இத்தனைக்கும் தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்கள் கோலோச்சிக் கொண்டிருந்த காலமது. ஆனால் பாக்யராஜின் மகனாக இருந்தும் சாந்தணுவால் முன்னணி நடிகராக வரமுடியவில்லை.

   
Shanthanu dances for Vijays Vaathi coming on Instagram reels

சாந்தணுவின் தந்தையான பாக்யராஜ் திரைக்கதை மன்னன் என் தன் காலத்தில் பெயர் எடுத்தவர். தமிழில் மட்டுமில்லாமல் இந்தியில் அமிதாப் பச்சனை வைத்து திரைப்படம் எடுத்து சூப்பர்ஹிட் கொடுத்தவர். ஆனால் அவரால் கூட சாந்தணுவுக்கு சரியான திரைக்கதையை தேர்வு செய்யமுடியவில்லை.

அதுமட்டுமில்லை சாந்தணுவுக்கு வந்த சில சிறந்த திரைப்படங்களையும் அவர் வேண்டாம் என சொல்லி மறுத்தி அனுப்பியுள்ளார். அப்படி அவர் நிராகரித்த திரைப்படங்கள்  மிகப்பெரிய ஹிட் படங்களாக அமைந்தன என்பதுதான் இதில் சோகம். பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் பரத், சந்தியா நடிப்பில் வெளியாகி இன்றளவும் பேசப்படும் படமாக உள்ள ‘காதல்’ திரைப்படத்தில் முதலில் சாந்தணுவைதான் நடிக்க வைக்க இயக்குனர் அணுகியுள்ளார்.

Shanthanu Bhagyaraj Instagram profile picture

ஆனால் அப்போது சாந்தணு மிகவும் சிறிய பையனாக இருப்பதாக நினைத்த பாக்யராஜ் அந்த கதையை வேண்டாம் என சொல்லியுள்ளார். அதன் பிறகு சசிகுமார் இயக்கிய சுப்ரமணியபுரம் படத்தில் ஜெய் நடித்த வேடத்திலும் சாந்தணுதான் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அந்த கதையையும் பாக்யராஜ் வேண்டாம் என நிராகரித்துள்ளார்.

இதன் பிறகு களவாணி உள்ளிட்ட திரைப்பட வாய்ப்புகளும் சாந்தணுவுக்கு வந்து நழுவி போயுள்ளன.  அதன் பிறகு 15 வருட போராட்டத்திற்குப் பிறகு இப்போதுதான் ப்ளு ஸ்டார் படத்தின் மூலம் தன்னுடைய முதல் வெற்றியை ருசித்துள்ளார் சாந்தணு.

author avatar