தமிழ் சினிமாவின் வியாபார எல்லையைப் பெருக்கியவர்களில் ஒருவர் இயக்குனர் ஷங்கர். அவர் படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த நிலையில் தமிழ் சினிமாவின் நம்பர் 1 கமர்ஷியல் இயக்குனராக அறியப்பட்டார். ஆனால் சமீபகாலமாக அவர் இயக்கிய ஐ, 2.0 மற்றும் இந்தியன் 2 ஆகிய படங்கள் அவரது முந்தையப் படங்களின் வெற்றியைப் பெறவில்லை.
அதிலும் இந்தியன் 2 திரைப்படம் கடுமையான கேலிகளுக்கு ஆளாகியுள்ளது. சமூகவலைதளங்களில் அந்த படத்தை அக்குவேறு, ஆணிவேராகக் கிழித்து தொங்கவிட்டுக் கொண்டிருக்கின்றனர். இத்தனைக்கும் ஷங்கர் தன்னுடைய படங்களில் ஊழல் எனும் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருப்பதே காரணம் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதையடுத்து அவர் தெலுங்கில் கேம்சேஞ்சர் படத்தை இயக்கி, அதை பேன் இந்தியா ஸ்டிக்கர் ஒட்டி விற்கப்பார்த்தார். ஆனால் அந்த படமும் பப்படம் ஆனது. இதனால் ஷங்கர் இப்போது தன்னையே சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நிலையில் உள்ளார் என்று கருத்துகள் எழுந்துள்ளன.
இந்த அடுத்தடுத்த தோல்விகளால் ஷங்கருக்கான அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைப்பது அரிது என கருத்துகள் எழுந்துள்ளன. ஏனென்றால் அவர் இயக்கும் படங்கள் எல்லாம் அதிக பட்ஜெட் கொண்டவையாக உள்ளன. அதனால் பெரிய ஹீரோக்கள்தான் நடிக்க வேண்டும். ஆனால் இப்போது அவரை நம்பி இரண்டு ஆண்டுகள் கால்ஷீட் கொடுக்க எந்த முன்னணி ஹீரோவும் தயாராக இல்லை என சொல்லப்படுகிறது. இதனால் அவர் இயக்குவதாக அறிவிக்கப்பட்ட அந்நியன் 2 திரைப்படமும் கைவிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
ஷங்கரே அறிவித்துள்ள வேள்பாரி படமும் நடக்காது என சொல்லப்படுகிறது. இதுபற்றி பேசியுள்ள சினிமா பத்திரிக்கையாளர் அந்தணன் “ஷங்கர் இப்போது தன்னுடைய உச்சத்தை இழந்துவிட்டார். அவர் படங்கள் இன்றைய ட்ரண்ட்டில் இல்லை. அவரை நம்பி யாரும் 1000 கோடி ரூபாய் முதலீடு செய்யமாட்டார்கள். அதனால் வேள்பாரி வரவே வராது.” எனத் தடாலடியாக பேசியுள்ளார்.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…