பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் ஃபார்முலாவையே திருப்பி போட்ட பிரபுதேவா.. நடன புயல் காட்டிய மேஜிக்..

By Priya Ram

Updated on:

சங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் உருவான படம் கேம் சேஞ்சர். இதில் கியாரா அத்வானி ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் அஞ்சலி, எஸ் ஜே சூர்யா, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி, ஜெயராம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். மாபெரும் பட்ஜெட்டில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது.

   

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். நேற்று கேம்ஸ் செஞ்சர் படத்தில் இடம் பெற்ற ஜரகண்டி பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியானது. பிரம்மாண்ட கலர்ஃபுல் செட் பின்னணியில் நூற்றுக்கணக்கான குரூப் டான்ஸர்கள் பாடலில் ஆடுகின்றனர்.

இந்த பாடலுக்காக மட்டும் 90 கோடி ரூபாய் செலவானதாக தெரிகிறது. பொதுவாக சங்கர் இயக்கும் படம் என்றாலே பாடல் காட்சிகள் பிரமாண்டமாக இருக்கும். அவர் ஒரு பாடலை எடுப்பதற்கு இரண்டு முதல் மூன்று வாரங்கள் வரை எடுப்பார். ஆனால் பிரபுதேவா கோரியோகிராப் செய்த ஜரகண்டி பாடலை எடுப்பதற்கு எட்டு நாட்கள் தான் ஆனதாம்.

முதலிலேயே ரிகர்சல் செய்துவிட்டு சிறப்பாக வந்து நடனம் ஆடியுள்ளார்கள். பிரம்மாண்ட பாடலை குறுகிய நாட்களில் சங்கர் எடுத்துள்ளார். பிரபுதேவா இல்லை என்றால் இதற்கு சாத்தியமே இல்லை. ஜரகண்டி பாடலில் லிரிக்கல் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

author avatar
Priya Ram