தமிழ் சினிமாவில் 2000 காலகட்டத்தில் ஃபேவரைட் ஹீரோயினிகளில் ஒருவராக இருந்தவர்தான் நடிகை ஷாலினி. முதலில் மலையாளத் திரைப்படங்களில் நடிக்க தொடங்கிய பிறகு காதலுக்கு மரியாதை என்ற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினியாக அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் அவர் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். 1997 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் ஷாலினிக்கு மிகப்பெரிய அறிமுக படமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து மலையாள மற்றும் தமிழ் மொழியில் நடித்து வந்த அவர் அஜித்துக்கு ஜோடியாக அமர்க்களம் என்ற திரைப்படத்தில் நடித்து மாபெரும் ஹிட் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து கண்ணுக்குள் நிலவு, அலைபாயுதே மற்றும் பிரியாத வரம் வேண்டும் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார்.

இந்த நிலையில் அஜித்தை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். திருமணத்திற்குப் பிறகு நடிப்பதையே விட்டு விட்டார் ஷாலினி. இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் சமீப காலமாக ஆக்டிவாக இருந்து வரும் ஷாலினி தற்போது கணவர் அஜித், மகன் மற்றும் மகள் என குடும்பத்தோடு ஸ்பெயின் நாட்டிற்கு சுற்றுலா சென்று உள்ளார். ஸ்பெயின் நாட்டில் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில் அந்த இடத்தில் அஜித் தனது குடும்பத்தினரையும் கூட்டிச் சென்றுள்ளார்.

சமீபத்தில் அஜித்துடன் ரொமான்டிக் வீடியோவை ஷாலினி வெளியிட்டு இருந்தார். அதனைத் தொடர்ந்து தன் மகனுக்கு மிகவும் பிடித்த ஃபுட்பால் எக்ஸிபிஷன் இடத்திற்கு கூட்டிச் சென்று இருந்தார். தற்போது தனது மகள் அனுஷ்கா ஓவியத்தில் அதிக ஆர்வம் கொண்டவர் என்பதால் அவரை அழகான ஓவியங்கள் குவிக்கப்பட்ட எக்ஸிபிஷனுக்கு கூட்டி சென்றுள்ளார். அது தொடர்பான வீடியோவை ஷாலினி இணையத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அட நம்ம குட்டி பாப்பா அனோஷ்காவா இது இம்முட்டு வளந்துட்டாங்களே என்று ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
