தமிழகத்தில் மீண்டும் மீண்டும் ஷாக்..! கர்ப்பிணிப் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை… தவெக நிர்வாகி கைது…!!

By Soundarya on ஆனி 16, 2026

Spread the love

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே கர்ப்பிணிப் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) உள்ளூர் பிரமுகர் யோகேஸ்வரன் என்பவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். அப்பகுதியில் உள்ள ஒரு கர்ப்பிணிப் பெண் இயற்கை உபாதை கழிக்கச் சென்றபோது, யோகேஸ்வரன் அவரை வழிமறித்துப் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள், அந்த நபரைக் கையாண்டு தர்மஅடி கொடுத்துக் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து யோகேஸ்வரனைத் தீவிர விசாரணைக்குப் பின் சிறையில் அடைத்தனர். சமீபகாலமாக தவெக நிர்வாகிகள் சிலர் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரிசையாகக் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், கர்ப்பிணிப் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த இந்தச் சம்பவம் பொதுமக்களிடையேயும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் அதிர்ச்சியையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது