அடச்சீ… பொறுப்பேற்ற ஒரே வாரத்தில்… 9 மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த தலைமையாசிரியர்… இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!

By Swetha on கார்த்திகை 19, 2026

Spread the love

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள புதூர் அருங்குறிக்கை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியர் திருவிக்ரமன், 3, 4 மற்றும் 5ஆம் வகுப்பு பயிலும் 9 மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்துள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் பொறுப்பேற்ற இவரிடம் பாதிக்கப்பட்ட மாணவிகள், இது குறித்து தங்கள் பெற்றோரிடமும் சக ஆசிரியர்களிடமும் தெரிவித்துள்ளனர்.

ஆசிரியர்கள் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய விழுப்புரம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் இளமதி, தலைமையாசிரியர் திருவிக்ரமனைத் தற்காலிகப் பணிநீக்கம் செய்துள்ளார். மேலும், கல்வித் துறை அலுவலர்களின் புகாரின் அடிப்படையில் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

   

ஏற்கெனவே வேறு இரண்டு மாணவிகளிடம் இதேபோல் நடந்து கொண்டதாக இவர் மீது வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது. பள்ளிகளில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு உரிய மனநல ஆலோசனை வழங்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.