நம்பிக்கை துரோகம்!… மகளின் கதறல்… துடிதுடித்துப் போன தாய்… 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… வளர்ப்பு தந்தை செய்த பகீர் காரியம்… போலீஸ் வலையில் சிக்கியது எப்படி?…!!

By Gayathri on ஐப்பசி 1, 2026

Spread the love

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்த 38 வயதான பெண் ஒருவர், தனது முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு 16 வயது மகளுடன் சென்னை புழல் பகுதியில் குடியேறினார். அங்கு கூலி வேலை செய்து வந்த அவருக்கு, அப்பகுதியைச் சேர்ந்த முரளி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த அறிமுகம் நாளடைவில் நெருக்கமாக மாறி, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டு மகளுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தனர்.

முரளி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில், மனைவியின் 16 வயது மகள் அங்குள்ள அரசுப் பள்ளியில் பயின்று வந்தார். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு தாய் வேலைக்குச் சென்றிருந்த நேரத்தில், பள்ளி முடிந்து வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் வளர்ப்புத் தந்தையான முரளி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். மேலும், நடந்ததை வெளியே சொன்னால் அடித்து வீட்டை விட்டு துரத்திவிடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன சிறுமி யாரிடமும் கூறாததைச் சாதகமாகக் கருதிய முரளி, தொடர்ந்து பலமுறை அச்சிறுமியைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார்.

   

வளர்ப்புத் தந்தையின் தொடர் தொல்லைகளைத் தாங்க முடியாத சிறுமி, ஒருகட்டத்தில் நடந்த கொடூரங்களை தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தாய், உடனடியாக புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், மாதவரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் முரளி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். விரைந்து செயல்பட்ட போலீஸார் குற்றவாளியைக் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பாதுகாப்பளிக்க வேண்டிய வளர்ப்புத் தந்தையே இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.