மலையாளத்தில் கடந்த 2024ம் ஆண்டு வெளியாகி ரூ. 200 கோடிக்கு மேல் வசூலை அள்ளிய படம் மஞ்சும்மெல் பாய்ஸ். இந்த படத்தை இளம் இயக்குனர் சிதம்பரம் டைரக்ட் செய்திருந்தார். தமிழகத்திலும் இந்த படம் வெற்றிகரமாக ஓடியது. கொடைக்கானலில் உள்ள குணா குகை என்று அழைக்கப்படும் இடத்தில் தான் இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டு இருந்தது. அதனால் நடிகர் கமல்ஹாசன் இந்த படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டினார்.
இந்நிலையில் மஞ்சும்மெல் பாய்ஸ் படத்தின் இயக்குனர் சிதம்பரம் மீது கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் பெண் ஒருவர் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று பாலியல் புகார் அளித்துள்ளார். 2022ம் ஆண்டு தனது அடுக்குமாடி குடியிருப்பில் அத்துமீறி நுழைந்து தகாத நடத்தையில் சிதம்பரம் ஈடுபட்டதாக அந்த பெண் புகாரில் கூறியுள்ளார். பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 74 மற்றும் 75ன்கீழ் இயக்குனர் சிதம்பரம் மீது வழக்குப்பதிவு செய்த எர்ணாகுளம் தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
