யாரையும் விடக்கூடாது…. ஜெம் கிரானைட் வீரமணி வழக்கில் CM விஜய் எடுத்த அதிரடி முடிவு…. கோட்டையில் நடந்த ரகசிய ஆலோசனை….!

By Nanthini on புரட்டாதி 21, 2026

Spread the love

ஜெம் கிரானைட் வீரமணி மீதான சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் ஒருவரையும் தப்பவிடக் கூடாது என்றும், அனைவர் மீதும் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் விஜய் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாகக் கடந்த இரண்டு நாள்களில் இருமுறை சென்னை காவல் ஆணையர் அமல்ராஜை நேரில் அழைத்து முதல்வர் தீவிர ஆலோசனை நடத்தியுள்ளார்.

கடந்த மாதம் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொழிலதிபர் வீரமணி கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவருக்கு உடந்தையாகச் செயல்பட்ட மேலும் இருவர் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில், வழக்கில் தொடர்புடைய எவரையும் விலக்காமல் சட்டத்தின் முன் நிறுத்தித் தண்டனை பெற்றுத் தருவதை காவல் துறை உறுதி செய்ய வேண்டும் என்பதில் முதல்வர் உறுதியாக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.