“ஓடும் ரயிலில்.. தூங்கிய 6 வயது சிறுமி… அருகில் வந்த காம மிருகம்”… அடுத்து நடந்த உச்சக்கட்ட கொடூரம்….!

By Nanthini on வைகாசி 13, 2026

Spread the love

கேரளாவிலிருந்து தமிழகம் நோக்கி வந்துகொண்டிருந்த பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலில், ஆறு வயது சிறுமி ஒருவருக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த அந்தச் சிறுமி, தனது தாத்தாவுடன் கேரளாவின் எடத்துவா தேவாலயத்திற்குச் சென்றுவிட்டு, மீண்டும் சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. வியாழக்கிழமை அதிகாலை ரயிலின் பொதுப் பெட்டியில் பயணம் செய்தபோது, எதிர்பாராத விதமாக இந்த அநீதி அரங்கேறியுள்ளது.

காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையின்படி, ரயிலின் தரையில் உறங்கிக் கொண்டிருந்த சிறுமியை, அதே பெட்டியில் பயணித்த நபர் ஒருவர் நயவஞ்சகமாகத் தனது இருக்கை அருகே அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து அந்தச் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அப்போது அருகில் இருந்த சக பெண் பயணி ஒருவர் இதைக் கவனித்து, உடனடியாக கூச்சலிட்டு அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்துள்ளார். இதனால் பதற்றமடைந்த அந்த நபர், ரயில் செங்கோட்டை நிலையத்தை நெருங்கியதும் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

   

இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், ரயில்வே காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். தப்பியோடிய நபர், பெண் பயணியின் செல்போன் வீடியோவில் பதிவாகியிருந்தது விசாரணையை எளிதாக்கியது. அந்த ஆதாரத்தின் அடிப்படையில் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்திய காவல்துறையினர், வெள்ளிக்கிழமை அன்று கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க நபரை அதிரடியாகக் கைது செய்தனர்.

   

கைது செய்யப்பட்ட நபர் கோழிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருபவர் என்பது தெரியவந்துள்ளது. அவர் மீது குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் போக்சோ (POCSO) சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா ஆகிய கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். பொதுப் போக்குவரத்தில் பயணிகளின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை இச்சம்பவம் மீண்டும் ஒருமுறை எழுப்பியுள்ளது.