மகாராஷ்டிர மாநிலம் பிம்ப்ரி-சின்ச்வாடி ராவேத் பகுதியில், பெண் நாய் ஒன்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி (CCTV) கேமரா காட்சிகளின் ஆதாரத்தோடு இந்த அத்துமீறல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வாயில்லா ஜீவனுக்கு நேர்ந்த இந்த அவலம் சமூக வலைத்தளங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் கடும் கண்டனங்களை எழுப்பியுள்ளது.
இச்சம்பவம் குறித்துப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், இந்த வக்கிர செயலில் ஈடுபட்ட நபர் 35 வயது மதிக்கத்தக்க ராஜேந்திர ரகுநாத் ஷாகு என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, அந்த நபரை உடனடியாகக் கைது செய்த போலீசார், அவர் மீது வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
