மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் பகுதியில், உயிரைக் காக்கும் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஒரு இளம்பெண் மற்றும் இரண்டு வாலிபர்கள் ஆட்சேபனைக்குரிய முறையில் (அரைகுறை ஆடையுடன்) இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் வேகமாகச் சென்ற அந்த ஆம்புலன்ஸின் ஜன்னல் வழியாகப் பார்த்த வழிப்போக்கர்கள், உள்ளே நடக்கும் அத்துமீறலைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, அந்த வாகனத்தை விடாமல் சுமார் 5 கிலோமீட்டர் தூரம் வரை பொதுமக்கள் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர். வண்டியை நிறுத்தி சோதனையிட்டபோது, உள்ளே ஒரு பெண்ணும் இரண்டு ஆண்களும் முறையற்ற நிலையில் இருந்ததை உறுதி செய்தனர்.
एंबुलेंस बनी चलता फिरता OYO. राहगीरों ने एंबुलेंस की विंडो से देखी गलत हरकत है, जिसके बाद लोगों ने किया पीछा. तकरीबन 5 किलोमीटर बाद एक लड़की और दो लड़कों को पकड़ा गया.
📍 छतरपुर (मध्य प्रदेश) pic.twitter.com/C2Ipwl8US3
— ocean jain (@ocjain4) April 23, 2026
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும், “ஆம்புலன்ஸ் என்பது நடமாடும் ஓயோ (Moving OYO) விடுதியாக மாறிவிட்டதா?” என ஆவேசமாகக் கேள்வி எழுப்பி வருகின்றனர். அவசர கால மருத்துவ சேவைக்கு பயன்படும் வாகனம் இப்படித் தவறாகப் பயன்படுத்தப்பட்டது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
