தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூந்தமல்லி தொகுதி வேட்பாளரான பிரகாசம் (என்கிற குட்டி) மீது பாலியல் துன்புறுத்தல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண், திருவள்ளூர் எஸ்பி அலுவலகத்தில் அளித்த புகாரில், பிரகாசம் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், இது குறித்து வெளியில் சொன்னால் கூலிப்படை வைத்து குடும்பத்தைக் கொன்று விடுவேன் என மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார். இப்புகாரின் அடிப்படையில், பிரகாசம் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
2026 சட்டமன்றத் தேர்தலில் பூந்தமல்லி தொகுதியில் போட்டியிட பிரகாசம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தப் புகார் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேடைகளில் பெண்கள் பாதுகாப்பு குறித்துப் பேசும் தவெக தலைவர் விஜய், இத்தகைய குற்றச்சாட்டுக்கு உள்ளானவரை வேட்பாளராக அறிவித்தது விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. ஏற்கனவே இக்கட்சியின் பிற வேட்பாளர்கள் மீதும் பல்வேறு புகார்கள் எழுந்துள்ள நிலையில், இது தவெக தலைமைக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
