சீச்சீ… என்னடா இது… 2 வயசு பசு மாட்டிற்கு பாலியல் கொடுமை… செல்போனில் சிக்கிய கொடூரம்… குஜராத்தில் அதிர்ச்சி சம்பவம்…!

By Swetha on புரட்டாதி 13, 2026

Spread the love

குஜராத்தின் ராஜ்கோட் மாவட்டத்தில் இரண்டு வயது பசுமாட்டிற்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறி நபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பசுவின் உரிமையாளர் உடனடியாகப் புகார் அளித்ததைத் தொடர்ந்து, காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட நபரைப் பிடித்துள்ளனர்.

இந்தக் கொடூரமான செயல் கைபேசியில் பதிவு செய்யப்பட்டு, அதற்கான ஆதாரங்கள் பெறப்பட்ட பின்னரே உரிமையாளர் காவல்துறையை அணுகியுள்ளார். மொபைல் வீடியோவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

   

விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள இந்தச் சம்பவம் குறித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக உண்மைகளைக் கண்டறியத் தொடர் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.