“கிரிக்கெட் மைதான அருகே துண்டிக்கப்பட்ட மனித தலை… 200 மீட்டர் தள்ளி தண்டவாளத்தில் உடல்….! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

By Devi Ramu on ஆடி 29, 2026

Spread the love

பெங்களூருவின் கோடத்தி பகுதியில் உள்ள கிரிக்கெட் மைதானம் அருகே மனிதத் தலை ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது. தொடக்கத்தில் இது கொடூரக் கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்த நிலையில், சம்பவம் அறிந்த காவல்துறையினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் விரைந்து வந்து ஆய்வுகளை மேற்கொண்டு விசாரணை நடத்தினர். அருகிலுள்ள இரயில் பாதையில் முந்தைய நாள் இரவு தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட உடலையும், மைதானத்தில் கண்டெடுக்கப்பட்ட தலையையும் ஒப்பிட்டு அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில், இரயில் விபத்தில் பலியான நபரின் தலையைத் தெருநாய்கள் 200 மீட்டர் தொலைவிலுள்ள மைதான பகுதிக்கு இழுத்து வந்திருக்கலாம் என்ற உண்மை வெளிவந்துள்ளது. உயிரிழந்தவர் ஆந்திராவைச் சேர்ந்த 28 வயது இளைஞராக இருக்கலாம் எனக் கருதப்படும் நிலையில், மரணத்தை உறுதி செய்ய அறிவியல் பூர்வ பரிசோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சமூக வலைதளங்களில் பரவும் உறுதிப்படுத்தப்படாத வதந்திகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும், தடயவியல் ஆய்வின் முடிவுகளுக்குப் பிறகே முழுமையான விவரங்கள் அறியவரும் என்றும் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.