ஈரான் – இஸ்ரேல் போர்…! இந்தியர்களுக்கு காத்திருக்கும் விலைவாசி அதிர்ச்சி…! லிட்டருக்கு ரூ.15 உயருகிறதா பெட்ரோல்…?

By Devi Ramu on பங்குனி 10, 2026

Spread the love

மத்திய கிழக்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றம் காரணமாக இந்தியாவில் சமையல் எரிவாயு மற்றும் எரிபொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. முக்கிய கடல்வழிப் பாதைகள் மூடப்பட்டுள்ளதால், கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சிலிண்டர் விநியோகம் தடைபட்டுள்ளது.

இதன் எதிரொலியாக சென்னையில் சிலிண்டர் விலை ₹928 ஆக உயர்ந்துள்ளதோடு, தட்டுப்பாட்டைத் தவிர்க்க ஒரு சிலிண்டர் முன்பதிவு செய்ய 25 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும் என்ற புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. சிலிண்டர் கிடைக்காததால் சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் பல உணவகங்கள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

   

மறுபுறம், கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் லிட்டருக்கு ₹15 வரை உயர வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. எரிபொருள் விலை உயர்ந்தால் லாரி வாடகை அதிகரித்து, அத்தியாவசியப் பொருட்களான காய்கறி மற்றும் மளிகைப் பொருட்களின் விலையும் கிடுகிடுவென உயரும் அபாயம் உள்ளது.

   

இந்தச் சர்வதேசப் போரினால் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவதுடன், பங்குச்சந்தையிலும் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. அரசு மாற்று வழிகளில் எரிபொருளைத் திரட்ட முயன்றாலும், வரும் நாட்களில் சாமானிய மக்களின் பட்ஜெட் கடுமையாகப் பாதிக்கப்படும் என்பது உறுதியாகியுள்ளது.