“இந்தியாவை உலுக்க வரும் ‘எல் நினோ’ பேரழிவு”… அடுத்த 3 மாதங்களுக்கு காத்திருக்கும் பேராபத்து…. உலக வானிலை அமைப்பின் பகீர் அறிக்கை…!

By Nanthini on ஆனி 3, 2026

Spread the love

பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு நீர் வழக்கத்திற்கு மாறாக அதிக வெப்பமடைவதைக் குறிக்கும் ‘எல் நினோ’ (El Niño) நிகழ்வு, வரும் ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் உருவாக 80% வாய்ப்பு இருப்பதாக உலக வானிலை அமைப்பு (WMO) அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகளாவிய வானிலையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய இந்த நிகழ்வின் காரணமாக, இந்த ஆண்டு இந்தியாவில் தென்மேற்குப் பருவமழை வழக்கத்தை விட கணிசமாகக் குறையக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

   

மழைப்பொழிவு குறைவதோடு மட்டுமின்றி, நாடு முழுவதும் கடுமையான வெப்ப அலைகளின் (Heat waves) தாக்கம் தீவிரமடையவும், அடுத்த மூன்று மாதங்களுக்குக் கடுமையான வறட்சி நிலை ஏற்படவும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இந்தச் சூழல் நாட்டின் விவசாயம், குடிநீர் ஆதாரம் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையைப் பெருமளவில் பாதிக்கக்கூடும் என்பதால், இப்போதிருந்தே போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.