எங்க அம்மாவுக்கே நான் தான் பிரசவம் பார்த்தேன்.. மனம் திறக்கும் சீரியல் நடிகை தேவி பிரியா..!

By Nanthini on ஆனி 17, 2025

Spread the love

தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகை தான் தேவி பிரியா. 90ஸ் கிட்ஸ் அனைவருக்குமே தேவி பிரியாவை கட்டாயம் நினைவிருக்கும். காரணம் சீரியல்கள் மக்களை கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கொண்டிருந்த சமயத்தில் பல சீரியல்களில் பல கதாபாத்திரங்களில் தேவிப்பிரியா நடித்த கொண்டிருந்தார். வில்லியாக நடிக்கும் போது கோபத்தையும் வெறுப்பையும் இயல்பாக தன்னுடைய கண்களில் கொண்டு வந்து மிரட்டுபவர். சன் டிவியில் ஒளிபரப்பான சக்தி சீரியலில் தான் தேவிப்பிரியா அறிமுகமானார். முதல் சீரியலிலேயே தனது திறமையை நன்கு வெளிப்படுத்தியதால் அவருக்கு பல வாய்ப்புகள் கிடைத்தது.

புசுபுசுன்னு ஆனாலும்.. அந்த கண்ணும் அழகும்.. அந்தப் பேச்சும்.. சொக்க வைக்கும் தேவிப்பிரியா! | devipriya still inspires fans - Tamil Oneindia

   

பாரதிராஜா சீரியலில் நடித்த இன்னும் பிரபலமான இவருக்கு தொடர்ந்து சீரியல்களில் நடிக்கும் வாய்ப்புகள் வந்தது. பெரும்பாலும் இவர் நெகட்டிவ் வேடங்களில் தான் நடித்துள்ளார். அதேசமயம் விஜய் டிவி ஒளிபரப்பான பல்வேறு நடன நிகழ்ச்சிகளிலும் இவர் பங்கேற்று உள்ளார். பல்வேறு தொலைக்காட்சிகளில் 30க்கும் மேற்பட்ட சீரியல்களில் இவர் நடித்துள்ளார். மேலும் சினிமாவிலும் பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளதோடு சினிமாவில் பல சப்போர்ட்டிங் கதாபாத்திரங்களுக்கு பின்னணி குரலும் கொடுத்துள்ளார். தற்போதும் தொடர்ந்து தமிழ் சின்னத்திரையில் பயணித்துக் கொண்டிருக்கும் தேவிப்பிரியா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தன்னுடைய அம்மாவுக்கு பிரசவம் பார்த்தது குறித்து சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில், நாங்க மதுரையில் தான் இருந்தோம்.

   

ரொம்ப டீசண்ட்டா படுக்க கூப்பிட்டாங்க!.. சீரியல் நடிகை தேவிப்பிரியா பேட்டி...

 

அங்கெல்லாம் பெரும்பாலும் வீடு நர்சிங் ஹோம் என இரண்டும் ஒரே இடத்தில் இருக்கும். லீலா நர்சிங் ஹோம்ல தான் எங்க அம்மாவுக்கு பிரசவம் நடந்தது. என்னோட தங்கச்சி பிறக்கும்போது எனக்கு நல்லாவே விவரம் தெரியும். அங்க டாக்டர் பிரசவம் பார்த்துக் கொண்டிருக்கும்போது திடீரென மின்சாரம் இல்லாமல் போய்விட்டது. அந்த சமயத்துல எங்க அம்மா ரொம்ப மயங்கிட்டாங்க. டாக்டர் எல்லோரும் விட்டுட்டு போய்ட்டாங்க. எங்க அம்மாவுக்கு ஒரே ரத்தமா வந்துட்டு இருந்தது. நான் ரொம்ப பயத்தோட அவங்க நின்னுட்டு இருந்தேன். பிறகு டாக்டர்கள் வந்ததும் என்னோட தங்கச்சி வெளிய வரும்போது நான் தான் கையில ஏந்துன. அந்த சம்பவத்தை நானும் இன்னும் மறக்காம தான் இருக்கேன்.