சின்னத்திரை நடிகையான சுஜிதா குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். கடந்த வாரத்தில் இருந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சி பற்றி தான் பேச்சுகள் சோசியல் மீடியாவில் அடிபடுகிறது. அதற்கு காரணம் பிரபல தொகுப்பாளனியான மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகி விட்டார். அதற்கு பிரியங்கா தான் காரணம் என தெரிகிறது. இதனால் சோசியல் மீடியாவில் பலரும் மணிமேகலைக்கு ஆதரவாகவும், பிரியங்காவுக்கு எதிராகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

பிரியங்கா விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளனி. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அவர் ஒரு போட்டியாளராக பங்கேற்றார். ஆனால் தான் ஒரு போட்டியாளர் என்பதை மறந்துவிட்டு தொகுப்பாளர் போல செயல்படுகிறார் என பலரும் திட்டி தீர்த்தனர். சமீபத்தில் சுஜிதா அளித்த பேட்டியில் கூறியதாவது, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அதிகமாக உழைப்பை போடுவது பிரியங்கா தான். பிரியங்கா பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிஸியாகவே இருக்கிறார்.

அப்படி இருந்தும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என உழைத்துக் கொண்டு இருக்கிறார். நான் நடித்து வந்த சீரியல் முடிந்து விட்டது. எனது குழந்தைகளையும் குடும்பத்தையும் கவனித்துக் கொள்கிறேன். எனக்கு என்று ஒரு வருமானம் வேண்டும் என நான் நினைத்து கொண்டிருக்கிறேன். பிரியங்காவுக்கு அதுபோல் எதுவும் கிடையாது. அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என போராடுகிறார்.

நிகழ்ச்சியில் சமைக்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 7 டிஷ் சமைத்து அதனை மனதில் ஏற்றி வைத்துக்கொண்டு தான் போவேன். பிரியங்கா எவ்வளவு பிஸியாக இருந்தாலும் அதற்காக மெனக்கிட்டு பல வெரைட்டி உணவுகளை கற்றுக்கொண்டு சமைக்கிறார். என்னை விட பிரியங்காவுக்கு தான் 10 மடங்கு கஷ்டம் என சொல்லுவேன். பிரியங்கா எந்த இடத்தில் இருந்தாலும் அந்த இடத்தையே எனர்ஜி உள்ள இடமாக மாற்றி விடுவார். எனக்கு பிரியங்காவை ரொம்ப பிடிக்கும் என பேசி உள்ளார்.

#image_title
