அட நீங்களுமா?… பிக் பாஸ் செல்வதை புகைப்படம் வெளியிட்டு உறுதி செய்த ‘செம்பருத்தி’ சீரியல் நடிகை…

By Begam

Published on:

வீட்டில் உள்ள குடும்ப பெண்கள் பொழுதுபோக்கிற்காக பார்க்கும் நிகழ்ச்சிகள் ஒன்று  சீரியல். ஒவ்வொரு தொலைக்காட்சியிலும் பலவிதமான சீரியல்கள் ஒளிபரப்பப்படுகின்றன. ஒரு சில சீரியல் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விடுகிறது. அதுபோல ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல் ‘செம்பருத்தி’.இந்த சீரியல் ஆயிரம்  எபிசோடுகளை  தாண்டி சாதனை படைத்தது.

   

அந்த சீரியல் முடிவடைந்த நிலையில், நடிகை ஷபானா சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘மிஸ்டர் மனைவி’ சீரியலில் ஹீரோயினாக நடித்து அசத்தி வருகிறார். நடிகை ஷபானா பாக்கியலட்சுமி சீரியலில் நடித்த ஆரியன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் தற்பொழுது தங்களது வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விரைவில் தொடங்கப்படவுள்ளது நாம் அனைவரும் அறிந்ததே. இதைத்தொடர்ந்து இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களை பற்றிய தகவல்களும் இணையத்தில் அவ்வப்பொழுது வெளியாகி வைரலாகி வருகிறது. அந்தவகையில் தற்பொழுது பிக் பாஸ் கண் போன்ற பிரேஸ்லெட் ஒன்றை அணிந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளார் நடிகை ஷபானா. இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நீங்களும் பிக் பாஸிற்கு செல்கிறீர்களா? என கேள்வி எழுப்பி வருகின்றனர். இதோ அந்த பதிவு…

author avatar