#image_title
நடிகைகள் என்றாலே, சில காலத்திற்கு பிறகு அவர்களது மார்க்கெட் போய் விடும். அதன் பிறகு அவர்களுக்கு சினிமாவிலோ அல்லது சின்னத்திரையிலோ வாய்ப்புகள் கிடைப்பது என்பது சந்தேகம் தான். அதனால், அவர்கள் தங்களுக்கு மார்க்கெட் இருக்கும் போதே, அதில் வரும் பணத்தை சேமித்து வைத்து, ஏதேனும் ஒரு பிசினஸில் ஈடுபடுவது வழக்கமான ஒன்று. அப்படி தொழிலதிபர்களான பல நடிகைகள் இங்கு உண்டு. அப்படியான ஒருவர் தான் நடிகை சந்தோஷி ஸ்ரீகர்.
#image_title
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சந்தோஷி, 2004-ம் ஆண்டு வெளியான ஜெய் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக வலம் வரத் தொடங்கினார். அதன்பின்னர் சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த சந்தோஷி, சின்னத்திரையிலும் கொடி கட்டி பறந்தார். அதன் பின்பு தன்னுடன் பணியாற்றிய ஸ்ரீகர் என்பவருடன் காதலில் விழுந்து திருமணம் செய்து கொண்டவர், நடிப்பில் இருந்து சிறிது காலம் இடைவேளை எடுத்துக் கொண்டார். பின்பு இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்த நிலையில், அடுத்து இரட்டை பெண் குழந்தைகளும் பிறந்தன.
#image_title
அதன் பிறகு திடீரென மேக்கப் பக்கம் திரும்பினார் சந்தோஷி. முதல் குழந்தை பிறந்த பிறகு என்ன செய்வதென்று சிந்திக்கத் தொடங்கியவர், மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டாக மாறலாம், அதற்கென ஒரு கடை வைத்து, பிறகு பயிற்சி நிலையம் தொடங்கலாம் என சிந்தித்தாராம். ஆனால் அவரிடம் வெறும் ஐடியா மட்டும் தான் இருந்ததாம். அவருடைய அம்மா, மற்றும் கணவருக்கு இடையே ஏற்பட்ட மனக்கசப்பால், கையில் இருந்த அனைத்துப் பொருட்களையும் விற்று பிசினஸ் தொடங்கினாராம். நிறைய கடன், நகைகளை அடமானம் வைத்து கிடைத்த பணத்தைக் கொண்டு கடையை தொடங்கினாராம் சந்தோஷி.
#image_title
இப்படி கஷ்டப்பட்டு தொடங்கியவர், இன்று PLUSH BOTIQUE AND BEAUTY LOUNGE என சென்னையில் தொடங்கினார். இங்கு நிகழ்ச்சிகளுக்கு அழகு படுத்துவதை தவிர, பயிற்சி நிலையமாக மாற்றி, பலருக்கும் வகுப்புகள் எடுத்து வருகிறார். அத்தோடு நகைகள், துணி மணிகள் என அனைத்திலும் கால் பதித்து கலக்கி வருகிறார் சந்தோஷி. இன்று மேக்கப் உலகில் தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்துள்ளார் சந்தோஷி ஸ்ரீகர்.
#image_title
கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செங்கோட்டையன், அளுக்குளி எம்.ஜி.ஆர். நகரில்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தில், அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது…
சென்னையில் தேர்தல் பரப்புரையின் போது விதிகளை மீறியதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது காவல்துறை வழக்குப் பதிவு…
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பிற்பகல் 3 மணிக்கு தனது…
கடலூர் மாவட்டத்தின் ஸ்ரீமுஷ்ணம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட விசிக தலைவர் திருமாவளவன், திமுக ஆட்சியைத் தொடர…