விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகையின் பெயர் சல்மா அருண். இவருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து ஒரு குழந்தையும் இருக்கிறது என்ற தகவல் வெளியாகிய நிலையில் அவரே இணையத்தில் வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் டிஆர்பி யில் முதல் இடத்தில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் தான் இப்போது கிராமப்புறங்கள் மற்றும் நகரப்புறங்களில் அதிகமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களும் ரசிகர்களின் மத்தியில் பிரபலமாக இருக்கின்றனர். அந்த வகையில் இப்போது இந்த சீரியலில் அதிகமாக பேசப்படும் நபராக ரோகிணி இருக்கிறார்.
இந்த சீரியலில் இவர் நெகட்டிவ் கேரக்டரில் நடித்து வந்தாலும் இதுவும் அதிகமான ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. அதுவும் ரோகினி எப்போது வீட்டில் மாட்டுவார் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஏற்கனவே மனோஜ் வீட்டில் மாட்டும் போது ரோகிணி என்ன முடிவு எடுப்பார் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருந்தாலும் இவருடைய நடிப்பை பார்த்து உச்சி கொட்டியவர்கள் தான் அதிகம். இந்த நிலையில் ரோகிணியாக நடிக்கும் நடிகை சல்மா அருணுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து ஒரு மகனும் இருக்கிறாராம்.
இந்த நிலையில் நேற்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய கணவர் குறித்து உருக்கமான பதிவுகளை சல்மா பதிவிட்டு இருக்கிறார். அதில் முதல் முறையாக தன்னுடைய கணவரின் புகைப்படத்தை பதிவிட்டு தன்னுடைய கணவர் அருணுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்லி இருக்கிறார். அதோடு என் வாழ்வின் ஒரு பகுதியாக அருண் இருப்பதற்கு நன்றி, இது ஒரு அற்புதமான நாள், 10 வருடங்கள் காதல், சிரிப்பு மற்றும் மகிழ்ச்சியோடு இணைந்திருக்கிறோம்.
அதுபோல நான் உன்னை எவ்வளவு நேசிக்கிறேன் என்று உனக்கு தெரியும். நீங்கள் சிறந்த கணவர் மற்றும் சிறந்த தந்தை. என் வாழ்க்கையில் நடந்த மிகச்சிறந்த விஷயம் நீங்கள் கிடைத்தது தான் என்று கணவர் மற்றும் குழந்தை புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்; அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.