இன்ஸ்டாவில் கணவரை ‘டெலிட்’ செய்த சீரியல் நடிகை… ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவும் விவாகரத்து வதந்தி…!

By Swetha on ஆடி 11, 2026

Spread the love

சின்னத்திரை ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற ஜோடிகளான ரேஷ்மா முரளிதரன் மற்றும் மதன் பாண்டியன் விவாகரத்து செய்யப் போகிறார்களா என்ற விவாதம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஜீ தமிழின் ‘பூவே பூச்சூடவா’ சீரியலில் ஒன்றாக நடிக்கும் போது காதலித்து, கடந்த 2021-ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகும் ‘அபி டெய்லர்’ சீரியலில் ஜோடியாக நடித்த இவர்கள், தங்களின் மகிழ்ச்சியான தருணங்களை எப்போதும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்தனர்.

ஆனால், சமீபகாலமாகவே இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக வதந்திகள் பரவி வந்தன. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக எந்த விளக்கமும் வராத நிலையில், தற்போது ரேஷ்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து கணவர் மதனுடன் எடுத்த அனைத்துப் புகைப்படங்களையும், திருமணப் புகைப்படங்களையும் திடீரென நீக்கியுள்ளார். ரேஷ்மாவின் இந்த அதிரடிச் செயல் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அவர்கள் பிரிந்துவிட்டார்கள் என்ற சந்தேகத்தையும் வலுப்படுத்தியுள்ளது.

   

அதே நேரத்தில், மதன் பாண்டியனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரேஷ்மாவின் புகைப்படங்கள், பிறந்தநாள் கொண்டாட்டம் மற்றும் திருமணப் புகைப்படங்கள் என அனைத்தும் அப்படியே இருக்கின்றன. மதன் எதையும் நீக்காத நிலையில், ரேஷ்மா மட்டும் புகைப்படங்களை நீக்கியிருப்பது ரசிகர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இது வழக்கம் போல பரவும் வதந்தியா அல்லது இவர்களின் காதலில் நிஜமாகவே விரிசல் விழுந்துவிட்டதா என்பது இருவரில் யாராவது ஒருவர் விளக்கம் அளித்தால் மட்டுமே தெரியவரும்.