சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல் மூலம் பிரபலமடைந்தவர் ரச்சித்தா மகாலட்சுமி, இருவருக்கும் ஏற்கனவேதிருமணமாகி விவாகரத்தான நிலையில் இரண்டாவது திருமணத்திற்கு தயாராக இருக்கிறார் என்ற தகவல் வெளியாகின; தற்போது மாப்பிள்ளை குறித்த தகவலும் கசிந்துள்ளது.
பெங்களூரை சேர்ந்த ரச்சித்தா மகாலட்சுமி , கன்னட சீரியல் மூலம் அறிமுகமாகி இருந்தாலும் அடுத்தடுத்த வாய்ப்புகளை அள்ளிக்கொடுத்து பிரபலமடைய செய்தது தமிழ் சீரியல்கள் தான். 2011 ஆம் ஆண்டு முதல் 2012 வரை, விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிரிவோம் சந்திப்போம்’ சீரியலில் அறிமுகமான ரச்சித்தா மஹாலட்சுமி , இந்த சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் கோபாலசுவாமியை காதலிக்க துவங்கினார்.
இந்த சீரியலை அவர் நடித்து முடிந்த கையேடு 2013 ம் ஆண்டு இருவருக்கும் பெற்றோர் சம்மதத்துடன், மிக பிரமாண்டமாக திருமணம் நடந்து முடிந்தது. திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து சீரியல்கள் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்த ரச்சித்தா மஹாலட்சுமி, இளவரசி, சரவணன் மீனாட்சி, பிரிவோம் சந்திப்போம், நாச்சியார்புரம், அம்மன் போன்ற ஏராளமான சீரியல்களில் நடித்துள்ளார்.
தமிழ் சீரியல்கள் மட்டுமில்லாமல் கன்னடம், மலையாளம் போன்ற மொழி சீரியல்களிலும் நடித்து பிரபலமானார். சின்னத்திரையை தாண்டி வெள்ளித்திரையிலும் சில தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்துள்ளார்.
அதே போல் கடந்த ஆண்டு நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்ட இவர், 91 நாள் நின்று விளையாடிய நிலையில் பின்னர் வெளியேறினார். பிக்பாஸ் வீட்டில் ரச்சித்தா இருந்த போது கணவர் பற்றி ஒரு வார்த்தை கூட பேசாத நிலையில், இவர்கள் இருவருக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடு குறித்த தகவல் மக்களிடையே வெகுவாக பரவியது .
அவரை போலவே தினேஷ் பிக் பாஸ் சீசன் 7 நிகழிச்சியில் கலந்துகொண்டார். அதில் ரச்சித்தா பிரிய நினைத்தாலும், தினேஷ் தன் மீதுள்ள தவறை உணர்ந்து அவருடன் மீண்டும் வாழ ஆசைப்படுவதாக பல முறை வெளிப்படுத்தினார். ஆனால் ரச்சித்தா தன்னுடைய முடிவில் மிகவும் உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ரச்சித்தாவின் இரண்டாவது திருமணம் குறித்த தகவல் சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது. தினேஷிடம் இருந்து முறையாக விவாகரத்து பெற்று பிரிந்த பின்னர், ரச்சித்தா இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும் முடிவில் உள்ளதாகவும், அவர் பிரபல கன்னட இயக்குனர் ஒருவரை திருமணம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் ரச்சித்தா மற்றும் தினேஷ் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.