பிரபல சீரியல் நடிகையான ரட்சிதா மகாலட்சுமி குட்டை டவுசரில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து இருக்கின்றார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது.
விஜய் டிவி ஒளிபரப்பாகி வந்த பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலமாக தமிழில் அறிமுகமானவர் ரட்சிதா மகாலட்சுமி பூர்வீகமாக கொண்ட இவர் கன்னட சினிமாவிலும் ஒரு சில சீரியல்களில் நடித்தார்.
இருப்பினும் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலமாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். அதை தொடர்ந்து நாம் இருவர் நமக்கு இருவர், புதுப்புது அர்த்தங்கள் உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்து வந்தார்.
இவர் பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்திருந்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர் மிகச் சிறப்பாக விளையாடினார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளிவந்த பிறகு பெரிய அளவு சீரியல்களில் நடிக்கவில்லை என்றாலும் தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்தி வருகின்றார்.
வெள்ளித்திரையில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகின்றார். சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய ரட்சிதா அவ்வப்போது தான் எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவார்.
முன்பெல்லாம் குடும்ப பாங்காக எப்போதும் புடவையில் புகைப்படத்தை வெளியிட்டு வந்த இவர் தற்போது கிளாமர் ரூட்டுக்கு திரும்பி இருக்கின்றார். அந்த வகையில் தற்போது குட்டை டவுசரில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.