BIG NEWS: சற்றுமுன் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை… ரசிகர்கள் ஷாக்… வெளியான பரபரப்பு தகவல்…!

By Nanthini on மார்கழி 12, 2025

Spread the love

சிறகடிக்க ஆசை உள்ளிட்ட பல மெகா தொடர்களில் நடித்து வந்த சின்னத்திரை நடிகை ராஜேஸ்வரி (39) கணவருடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக அளவுக்கு அதிகமான ரத்த அழுத்தம் மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்று உள்ளார். சென்னை பிராட்வேயை சேர்ந்த நடிகை ராஜேஸ்வரி சதீஷ் என்பவரை காதலித்து 24 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ள நிலையில் கணவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இதனிடையே கடந்த சில நாட்களாக இவர்களுக்குள் குடும்ப பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

1

   

இதனால் கடந்த டிசம்பர் 7ஆம் தேதி ஏற்பட்ட குடும்ப தகராருக்கு பிறகு ராஜேஸ்வரி கணவரிடம் கோபித்துக் கொண்டு மறுநாள் காலை சைதாப்பேட்டையில் உள்ள தன்னுடைய தாய் வீட்டுக்கு சென்று விட்டார். அங்கு கடந்த மூன்று நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்த ராஜேஸ்வரி நேற்று இரவு தாய் வீட்டில் அளவுக்கு அதிகமான ரத்த அழுத்த மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்று உள்ளார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.