மகளின் கியூட் புகைப்படத்தை இணையத்தில் முதன்முறையாக பகிர்ந்த சீரியல் நடிகை நக்ஷத்ரா… வெளியான அழகிய புகைப்படங்கள்…

By Begam on கார்த்திகை 2, 2023

Spread the love

பிரபல தொலைக்காட்சி தொடரில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற சீரியல் யாரடி நீ மோகினி. அந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை நட்சத்திரா. அதில் தனது நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். இவர் நடித்த வெண்ணிலா கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தது.

   

இவர் கடந்த சில வருடங்களாக விஷ்வா என்பவரை காதலித்து வந்தார். இந்நிலையில் கடந்த வருடம் இருவரும் உறவினர்கள் மற்றும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இரு வீட்டார் முன்னிலையில் மிக எளிமையான முறையில் கோவிலில் இவர்களது திருமணம் நடந்து முடிந்தது.

   

 

 

அதன் பிறகு கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார். அதனைத் தொடர்ந்து கணவருடன் நிறைமாத வயிற்றுடன் போட்டோ சூட் நடத்திய அந்த புகைப்படங்களை பகிர்ந்து இருந்த நிலையில் இந்த புகைப்படங்களும் வைரலானது. இந்நிலையில் நட்சத்திராவிற்கு சமீபத்தில் ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது.

இவர் தனது மகளுக்கு இதழ் என்று அழகான தமிழ் பெயரை சூட்டியுள்ளார்.  ஆனால் செல்லமாக வீட்டில் ‘வெண்ணிலா’ என அழைப்பதாக கூறியிருந்தார்.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை நக்ஷத்ரா. தற்பொழுது இவர் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பதிவு செய்ய இப்புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.