44 வயதில் திருமணம் செய்து கொண்ட பிரபல சீரியல் நடிகை… வெளியான அழகிய ஜோடியின் புகைப்படம்…

By Archana on பங்குனி 21, 2023

Spread the love

90களில் பல தமிழ் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை லாவண்யா தேவி.

   

இவர் 1999ல் வெளியான ரஜினியின் ‘படையப்பா’ திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றார்.

   

 

இதை தொடர்ந்து ஜோடி, சேது போன்ற படங்களில் தனது திறமையான நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார்.

இவர் உலக நாயகன் கமலஹாசனின் ‘தெனாலி’ திரைப்படத்தில் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் நடித்திருந்தார்.

திருமலை, வில்லன்,எதிரி, ரன், சமுத்திரம், சுந்தரா டிராவல்ஸ், நான் தான் பாலா என 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியவர் நடிகை லாவண்யா.

ஒரு கட்டத்தில் வெள்ளித்திரையில் வாய்ப்புகள் குறையவே சின்னத்திரையில் கால் பதித்தார்.

தற்பொழுது இவர் சீரியல்களில் தனது கவனத்தை முழுவதுமாக செலுத்தி வருகிறார் .அந்த வகையில் தற்பொழுது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘அருவி’ சீரியலில் லட்சுமி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை லாவண்யா.

இந்நிலையில் நேற்று லாவண்யா பிரசன்னா என்பவரை திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார்.

இப்புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு நடிகை லாவண்யாவின் நண்பர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ’44 வயசில் திருமணமா?’ என்று அதிர்ச்சியில் உள்ளனர்.