‘அட்ஜஸ்ட்மென்ட் செய்யுறது அவுங்களோட சொந்த விருப்பம்… எனக்கும் நடந்தது’… சீரியல் நடிகை லதா ராவின் ஓபன் டாக்…

By Begam on ஆவணி 3, 2023

Spread the love

பிரபல சீரியல் நடிகையான லதா ராவ் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் மெட்டி ஒலி, செல்வி, திருமதி செல்வம் போன்ற பல மெகா சீரியல்களிலும் நடித்திருக்கிறார். மேலும், சில படங்களிலும் நடித்துள்ளார், இவர் நடிகர் ஜெயம் ரவி நடித்த தில்லாலங்கடி படத்தில் நடிகர் வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்திருப்பார்.

   

இவர் சீரியல் நடிகரான ராஜ்கமல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு லாரா, ராகா என்று இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் தற்பொழுது சின்னத்திரையில் கால்பதித்து கலக்கி வருகின்றனர். சமீப காலமாகவே, திரை உலகில் பலர்  பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மென்ட் கேட்கும், சில இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் பற்றி வெளிப்படையாக பேசுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

   

 

அந்த வகையில் நடிகை லதா ராவ் ஒரு வருடத்திற்கு முன்பே அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சினையால் பல பட வாய்ப்புகளை இழந்ததாக தெரிவித்திருந்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது, ‘சில நடிகைகள் பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்கிறார்கள்.

அட்ஜஸ்ட்மென்ட் செய்து வாய்ப்பை பெறுவதும், அட்ஜஸ்ட்மென்ட் செய்யாமல் இருப்பதும் நடிகைகளின் தனிப்பட்ட விருப்பம். எனக்கும் இதுபோன்ற அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. இதனால் நான் பல பட வாய்ப்புகளை இழந்துள்ளேன். அந்த படம் மற்றும் இயக்குனர் பற்றி பேச விருப்பமில்லை என்றும் கூறியிருந்தார். தற்பொழுது இவரின் இந்த பேட்டியானது மீண்டும் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.