Categories: சினிமா

திருமணமான 6 மாதத்தில் குட் நியூஸ் சொன்ன பிரபல ஜோடி.. வாழ்த்து மழை பொழியும் ரசிகர்கள்..!

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா சீரியலில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை கண்மணி மனோகரன்.     கடந்த 2019 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த தொடர் இல்லத்தரசிகளுக்கு மிகவும் பிடித்தமான தொடராக மாறியதை தொடர்ந்து கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் ஒளிபரப்பாகி கடந்த ஆண்டு நிறைவடைந்தது.      இந்த சீரியலை தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு சென்ற கண்மணி அமுதாவும் அன்னலட்சுமியும் என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். சீரியலில் பிசியாக நடித்து வந்த இவர் இன்ஸ்டாகிராமில் விதவிதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வந்தார். இதனிடையே திடீரென தனது காதலருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து காதலிப்பதை உறுதி செய்தார்.

இவர்களுக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இவருடைய காதல் கணவர் பிரபல தொலைக்காட்சியான சன் தொலைக்காட்சியில் வணக்கம் தமிழா போன்ற சில சிறப்பு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் அஸ்வத். இருவரும் நீண்ட நாள் காதலித்து வந்ததை தொடர்ந்து காதலை பெற்றோரிடம் சொல்லி திருமணத்திற்கு தயாரானார்கள்.  இவர்கள் தங்களின் திருமண பத்திரிக்கையை நடிகர் விஜய் சேதுபதிக்கும் சூப்பர் ஸ்டார் வீட்டுக்கு சென்று ரஜினியிடம் கொடுத்து ஆசிர்வாதம் பெற்றனர்.

இதனைத் தொடர்ந்து கடந்த வருடம் இறுதியில் கண்மணி மனோகரனுக்கும் தொகுப்பாளர் அஸ்வந்திற்க்கும் பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் நடந்து முடிந்தது. இந்நிலையில் தற்போது கண்மணி மனோகரன் தான் கர்பமாக இருப்பதாக அறிவித்து இருக்கிறார். அவர் வீடியோ வெளியிட்டு இதை ரசிகர்களுக்கு தெரிவித்து இருக்கும் நிலையில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

 

Nanthini

Recent Posts

இரத்தக் களரியான இலங்கை சிறைச்சாலை… தடுத்த போலீசாருக்கு நேர்ந்த கொடூரம்… போர்க்களமாக மாறிய நீர்கொழும்பு ஜெயில்…!

இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…

2 மணத்தியாலங்கள் ago

அயோத்தி ராமர் கோயில் விவகாரம்… டெலிட் செய்யப்பட்ட வீடியோவில் சிக்கிய ஆதாரம்… அம்பலமான அதிர்ச்சி உண்மை…!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…

2 மணத்தியாலங்கள் ago

திடீரென அணைந்த விளக்குகள்… காட்டுமன்னார்கோவில் அரசு மாளிகையில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி… காரில் தவித்த சௌமியா அன்புமணி… என்ன நடந்தது…?

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…

2 மணத்தியாலங்கள் ago

பயங்கர வெள்ளத்தில் சிக்கிய சொகுசு கார்கள், புல்டோசர்கள்… காஷ்மீரில் விடிய விடிய நடந்த கோரத்தாண்டவம்… நடுங்க வைக்கும் வீடியோ…!

ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…

3 மணத்தியாலங்கள் ago

இன்ஸ்டா கள்ளக்காதல் விபரீதம்… ஆண் நண்பர்களுக்கு நிர்வாண… வீடியோ அனுப்பிய மனைவி… காட்டுக்குள் வீசிவிட்டு தப்பிய கணவர் அதிரடி கைது…!!

கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…

3 மணத்தியாலங்கள் ago