“என்ன ஜனனி நீங்களா இப்படி..?” கையில் கிளாஸுடன் அப்படி ஒரு போஸ்… புகைப்படத்தை பார்த்து கடும் அதிருப்தியில் ரசிகர்கள்..

By Begam on தை 3, 2024

Spread the love

தற்பொழுது சினிமாவில் நடிக்கும் நடிகைகளுக்கு இணையாக சீரியல் நடிக்கும் நடிகைகளுக்கும் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து விட்டது என்றே கூறலாம்.அது மட்டும் இல்லாமல் சீரியலில் நடிக்கும் நடிகைகளுக்கு பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ரசிகர்கள் இருக்கிறார்கள்.

   

 

   

மேலும் சினிமாவில் நடிக்கும் நடிகைகளை விட ஒரு படி மேலே போய் உடைகள் உடுத்துவதும், விதவிதமான புகைப்படங்களை வெளியிடுவதும் வாடிக்கையாக வைத்துள்ளனர் சீரியல் நடிகைகள்.

 

அந்த வகையில் மாப்பிள்ளை, செம்பருத்தி, மௌனராகம் சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை ஜனனி அசோக்குமார். இதைத்தொடர்ந்து அவர் தற்பொழுது பல்வேறு சீரியல்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர் நடிகை ஜனனி. இவர் தான் மேக்கப் போடும் ஒவ்வொரு விஷயத்தையும் காட்டி வீடியோ வெளியிடுவது, போட்டோ ஷுட் புகைப்படங்களை வெளியிடுவது என எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பார்.

இவர் தற்பொழுது கையில் வைன் பாட்டில் மற்றும் கிளாஸுடன்  வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், ‘ என்ன ஜனனி இதெல்லாம்..?’ என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.