#image_title
சின்னத்திரை சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சீரியல் நடிகை காயத்ரி. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஹிட் சீரியல்களில் ஒன்றான சரவணன் மீனாட்சி சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார்.இத்தொடரில் ‘முத்தழகு’ கதாபாத்திரத்தில் நடித்த இவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பு கிடைத்தது.
இந்த சீரியலை தொடர்ந்து தென்றல் நிலா, அரண்மனைக்கிளி போன்ற பல்வேறு சீரியல்களிலும் நடித்தார். அதோடு மட்டுமில்லாமல் டான்ஸ் ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கு பெற்றுள்ளார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை காயத்ரி. இவர் யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
இதில் அவர் தனது சொந்த வாழ்க்கையின் அன்றாட நிகழ்வுகளை வீடியோவாக பதிவு செய்து வருகிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை காயத்ரி. நடிகை காயத்ரி யுவராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகனும் உள்ளார். சமீபத்தில் இவருக்கு இரண்டாவது பெண் குழந்தையும் பிறந்தது.
இவர் அவ்வப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். தற்பொழுது இவர் சொந்தமாக டான்ஸ் ஸ்டுடியோ ஒன்றை தொடங்கியுள்ளார். இந்த ஸ்டூடியோவில் துவக்க விழா சிறப்பாக நடந்து முடிந்தது. இந்த விழாவில் ராம்ஜி, நடிகர் ஆரி, புகழ், நடிகை பவித்ரா கலந்து கொண்டனர். நடிகர் ஆறி விளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்த வீடியோவை அவரே தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்ய, ரசிகர்கள் அனைவரும் தங்களது வாழ்த்துக்களை காயத்ரிக்கும் அவரது குடும்பத்திற்கும் தெரிவித்து வருகிறார்கள். இதோ அந்த வீடியோ…
லூதியானாவில் சினிமா பாணியில் நடந்த கார் திருட்டுச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் சமீபகாலமாக கார்…
மயிலாப்பூர் திமுக வேட்பாளர் த.வேலுவின் நேர்முக உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை…
கல்வித் தகுதியும், கைநிறையச் சம்பளமும் ஒரு மனிதனின் சமூக அந்தஸ்தை உயர்த்திவிடலாம், ஆனால் அவை அந்த மனிதனின் சிந்தனைப் போக்கை…
கேரள மாநிலம் திருச்சூர் அருகே நள்ளிரவில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 8 வயது சிறுவன் ஆல்ஜோ, பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம்…
கோவை தேர்தல் களம் தற்போது உச்சக்கட்ட அரசியல் பரபரப்பில் தகித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, கோவை தெற்கு தொகுதியில் திமுகவினர் வாக்காளர்களுக்குப்…
உலகளாவிய எரிசக்தி விநியோகத்தின் இதயத் துடிப்பாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) கப்பல் போக்குவரத்தை மீட்டெடுப்பது குறித்து…