பல லட்சம் மதிப்புள்ள சொகுசு காரை வாங்கியுள்ள கயல் சீரியல் நடிகை.. கணவர் மற்றும் காருடன் வைரல் புகைப்படங்கள்..!

By Mahalakshmi on ஜூன் 6, 2024

Spread the love

சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி புதிய கார் வாங்கியுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. கன்னட சினிமா மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சைத்ரா ரெட்டி, ஜீ தமிழில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றிருந்த யாரடி நீ மோகினி என்ற தொடரில் அழகான வில்லியாக நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்.

   

ரசிகர்கள் கொடுத்த மிகப்பெரிய பேராதரவை தொடர்ந்து தற்போது சன் டிவியில் கயல் என்கின்ற சீரியலில் நடித்து வருகின்றார். இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் இவர் மிகப் பிரபலமாக இருக்கின்றார். சீரியல் மூலமாக தற்போது சினிமா வாய்ப்பும் கிடைத்திருக்கின்றது.

   

 

ஒரு சில திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வருகின்றார். நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். யாரடி நீ மோகினி சீரியல் முடிவடைந்ததை தொடர்ந்து கடந்த 2020 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலரான ராகேஷ் ஷமலா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகும் சீரியலில் தொடர்ந்து நடித்து வரும் நடிகை சைத்ரா ரெட்டி சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். அவ்வபோது தான் எடுக்கும் புகைப்படங்களை எல்லாம் இணையதில் பகிர்ந்து வருவார். தற்போது அவர் புதிய கார் ஒன்றை வாங்கி இருக்கின்றார். தனது கணவர் மற்றும் காருடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை instagram பக்கத்தில் பதிவிட்டு இருக்கின்றார். அதை பார்த்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.