சீரியலில் தான் குடும்ப குத்து விளக்கு… நிஜத்தில் அல்ட்ரா மாடர்ன்… இணையத்தை கலக்கும் சீரியல் நடிகை அக்ஷிதா அசோக்கின் மாடர்ன் கிளிக்ஸ…

By Begam on கார்த்திகை 16, 2023

Spread the love

சின்னத்திரை சீரியல்கள்  மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை அக்ஷிதா அசோக் .இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி நிறைவடைந்த ‘காற்றுக்கென்ன வேலி’ என்ற சீரியலில் அபி என்ற நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

   

நடிகை அக்ஷிதா அசோக் சென்னை சேர்ந்தவர். மேலும் விஜய் தொலைக்காட்சியில் நடிப்பதற்கு முன்பு இவர் முதன்முதலில் சன் தொலைக்காட்சியில் ‘சாக்லேட்’ என்ற சீரியலில் அறிமுகமானார்.

   

 

இதனை தொடர்ந்து அன்பே வா, காற்றுக்கு என்ன வேலி, சாக்லேட், சித்தி 2 என பல சீரியல்களில் அக்ஷிதா அசோக் நடித்துள்ளார்.

இந்த நிலையில் சன் தொலைக்காட்சியில் ‘அன்பே வா’ சீரியலில் பூமிகாவின் தங்கை தீபிகாவாகவும் நடித்தார். மேலும் இவர் தனக்கென ஒரு youtube சேனலையும் தொடங்கி அதனை நடத்தி வருகிறார்.

தனது அன்றாட வாழ்க்கையில் நடக்கும் சுவாரசியமான சம்பவங்களை அதில் வீடியோவாக பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் தற்பொழுது இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி  வரும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில்  அமிர்தாவாக என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார். சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை அக்ஷிதா அசோக்.

இவர் அவ்வப்பொழுது தனது ஹாட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். சீரியலில் ஹோம்லியாக நடிக்கும் நடிகை அக்ஷிதா நிஜத்தில் படு மாடர்ன். இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர்.  இவருக்கென இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 7 லட்சம் பாலோவர்ஸ்கள் உள்ளனர். இந்நிலையில் நடிகை அக்ஷிதாவின் லேட்டஸ்ட் மாடர்ன் புகைப்படங்கள் இணையத்தில் தற்பொழுது வெளியாகி வைரலாகி வருகிறது.