காதலனை கரம்பிடித்த “தமிழும் சரஸ்வதியும்” சீரியல் நடிகை.. குவியும் வாழ்த்துக்கள்..!

By Soundarya on கார்த்திகை 24, 2024

Spread the love

கர்நாடகாவில் பிறந்த நடிகை  அக்ஷிதா போப்பையா தமிழ் மற்றும் கன்னட மொழி சீரியல் மற்றும் படங்களில் கலக்கி வரும் நடிகையாக வலம் வருகிறார்.   நடிகை அக்ஷிதா, கன்னடம் மற்றும் தமிழ் மொழியில் தற்பொழுது முன்னணி சீரியல் நடிகையாக திகழ்ந்து வருகிறார். மேலும், இவர் மாடல் அழகியாக  கலை உலகில் களமிறங்கியது குறிப்பிடத்தக்கது.

#image_title

தமிழ் மொழியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிரபல “அழகு” சீரியல் மூலம் சின்னத்திரை உலகில் நுழைந்தார். அதனை தொடர்ந்து கன்னடத்தில் சில திரைப்படங்களிலும் இவர் நடித்திருக்கிறார்.

   
   

marriage

 

தற்பொழுது பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “தமிழும் சரஸ்வதியும்” நாடகத்தில்  வில்லி கதாபாத்திரம் ஏற்று நடித்து வந்தார் நடிகை அக்ஷிதா. இந்த கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மேலும் ரசிகர்ள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். மேலும் கண்ணான கண்ணே சீரியலில் தங்கை ரோலில் நடித்தார்.

#image_title

மேலும் இவர் அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்.  மேலும் ஏரளமான பாலோவர்களை வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

Akshitha Bopaiah and Preetham Suresh Wedding: விஜய் டிவி சீரியல் நடிகைக்கு  கன்னட நடிகருடன் நடந்த திருமணம்! வாழ்த்த குவிந்த பிரபலங்கள்!

இதனை  அக்ஷிதா சீரியல்களில் இருந்து விலகி, திருமணத்திற்கு தயாரானார். இதனையடுத்து இவருக்கும், பெங்களூரை சேர்ந்த எக்சிகியூடிவ் புரடியூசர் மற்றும் நடிகர் ப்ரீதம் சுரேஷ் என்பவருக்கும் இன்று திருமணம் நடந்து முடிந்துள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.