சின்னத்திரை சீரியல்கள் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகர் ஸ்ரீகுமார். இவர் பிரபல இசை இயக்குனர் சங்கர் கணேஷின் மகன். இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் தன்னுடைய சின்னத்திரை பயணத்தை காவியாஞ்சலி என்ற தொடரின் மூலம் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து கண்மணி, அகல்யா, ஆனந்தம், மலர்கள், மேகலா, சிவசக்தி, உறவுகள், கனா காணும் காலங்கள், யாரடி நீ மோகினி, பிள்ளை நிலா போன்ற பல சூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் இவர் வெள்ளித் திரையிடும் ஒரு சில திரைப்படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். அதன்படி பம்பரக் கண்ணாலே, சரோஜாதேவி, ஆர் கே நகர் போன்ற பல படங்களில் இவர் நடித்துள்ளார்.
ஆனால் இவருக்கு சினிமாவில் வரவேற்பு கிடைக்காத நிலையில் சின்னத்திரை பக்கம் திரும்பி விட்டார். இவர் சீரியல்கள் மட்டுமல்லாமல் பல ரியலிட்டி நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்றுள்ளார். இவர் ஜோடி நம்பர் ஒன் மற்றும் மானாட மயிலாட போன்ற நடன நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்ற தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி உள்ளார். 2009 ஆம் ஆண்டு சமிதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவரும் ஒரு சீரியல் பிரபலம்தான்.
இந்த நிலையில் ஸ்ரீகுமார் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், எனக்கு தெரிஞ்சு ஒரு சீரியலில் ஒருத்தன் முதலில் நடிக்க வரும்போது 6 ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுத்தாங்க. அந்த சீரியல் பல வருஷமா ஓடி கொஞ்சம் கொஞ்சமா மேல வந்து டாப் இடத்தை பிடிச்சுச்சு. அப்போ அந்த நடிகர் ஒரு 2000 3000 என்று சம்பளத்தை உயர்த்தாமல் ஒரே அடியா சம்பளத்தை உயர்த்தி எனக்கு ஒரு நாளைக்கு 50 ஆயிரம் சம்பளம் கேட்டாரு. அவர் இல்லனா அந்த சீரியல் இல்லனா அவரை நினைச்சுட்டாரு போல.
ஒரு சீரியலில் ஒருத்தர் விலகிட்ட இன்னொருத்தர் வரும்போது மக்கள் அதை பார்க்க தான் செய்வாங்க அவங்களும் ஏத்துப்பாங்க. உதாரணத்துக்கு யாரடி நீ மோகினி சீரியல் இருந்து சஞ்சிவ் விலகியதும் அந்த சீரியலை யாருமே பார்க்க மாட்டாங்க என்று தான் சொன்னாங்க. ஆனா அவருக்கு பதில் அந்த இடத்துல நான் போனதும் மக்கள் அதை பார்க்க தான் செஞ்சாங்க. சீரியலில் ஒருத்தரிடத்துல இன்னொருத்தர் வரும்போது மக்கள் அதை ஏத்துக்க தான் செய்வாங்க என்று ஸ்ரீகுமார் பேசி உள்ளார். அதே சமயம் அந்த 40 ஆயிரம் ரூபாய் சம்பளம் கேட்ட நடிகர் யார் என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.
சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…
விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…
வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…
நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…