தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்த நடிகைகளில் ஒருவர் தான் கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா. இவர் ரஜினி மற்றும் கமல் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் இந்த உலகை விட்டு மறைந்தாலும் இன்னும் ரசிகர்களின் மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். காந்த கண்ணழகு, வசீகரமான மயக்கும் குரல், தனக்கென ஒரு ஸ்டைல் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்தவர். இவர் தன்னுடைய 17 வருட சினிமா வாழ்க்கையில் தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல தென்னிந்திய மொழிகளில் 450-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருடைய வாழ்க்கை வரலாற்றை டர்ட்டி பிக்சர் என்று படமாக எடுத்துள்ளார்கள்.
இப்படி இருந்தும் இவருடைய வாழ்க்கையில் எவ்வளவு சொல்லப்படாத விஷயங்கள் மர்மமாக இன்றும் உள்ளது. 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி இவர் தற்கொலை செய்து கொண்டார். இவர் காதல் தோல்வி, குடிப்பழக்கம் மற்றும் மன அழுத்தம் போன்ற காரணங்களால் தான் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்படுகிறது. இவருடைய மரணம் இன்னும் மர்மமாகவே உள்ளது. இவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் உறுதிப்படுத்தினர். இறப்பதற்கு முன்பு இவர் ஒரு தற்கொலை கடிதத்தை எழுதினார். அதில் அவர் என்ன எழுதியிருந்தார் என்பது குறித்து பார்க்கலாம்.
அதில், ஓர் அபலை பெண் என்று தொடங்கி, “கடவுளே என் ஏழு வயதில் இருந்து வயிற்று பிழைப்புக்காக எவ்வளவோ கஷ்டப்பட்டேன். எனக்கு சொந்தமானவர்கள் யாரும் இல்லை. நான் நம்பியவர்களும் ஏமாற்றி விட்டனர். பாபுவை தவிர என் மீது யாருக்கும் அன்பு இல்லை. பாபுவை தவிர மற்ற அனைவரும் என் கஷ்டத்தை சாப்பிட்டவர்கள் தான் என் பணத்தை சாப்பிட்டவர்கள் தான். எனக்கு மன அமைதியை இல்லாமல் செய்தார்கள். அனைவருக்கும் நான் நன்மையை செய்தேன். ஆனால் எனக்கு கெடுதல் மட்டும்தான் நடந்தது. என் சொத்தில் உள்ள அனைத்தையும் பாபுவின் குடும்பத்திற்கும் என் குடும்பத்திற்கும் பங்கிட வேண்டும். என் ஆசைகள் அனைத்தையும் ஒருவர் மீது வைத்திருந்தேன் ஆனால் அவர் என்னை ஏமாற்றி விட்டார். கடவுள் என்பவர் ஒருத்தர் இருந்தால் அவரைப் பார்த்துக் கொள்வார்.
தினமும் இதனால் ஏற்படும் சித்திரவதையை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ராமு மற்றும் ராதாகிருஷ்ணன் என்னை மிகவும் துன்புறுத்தினர். அவர்களுக்கு நான் நிறைய உதவி செய்தேன். ஆனால் அவர்கள் எனக்கு துரோகம் செய்தார்கள். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் எனக்கு வாழ்க்கை தருவதாக கூறினார். இப்போது தரவில்லை. பாபுவை தவிர என் உழைப்பை சாப்பிடாதவர் யாரும் கிடையாது. இதை எழுதுவதற்கு நான் எவ்வளவு நரக வேதனை அனுபவித்தேன் என்பதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. வாழ்க்கையில் பல கொடுமைகளுக்கு மரணம் தான் நிரந்தரம் என்று தோன்றுகிறது என சில்க் ஸ்மிதா அந்த கடிதத்தில் எழுதியிருந்தார். ஆனால் அந்த கடிதத்தில் பாபு என்று அவர் யாரை குறிப்பிட்டுள்ளார் அவர் யார் என்பது இன்றும் புரியாத புதிராகத்தான் உள்ளது.
சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…
விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…
வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…
நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…