சின்னத்திரை என்றாலே மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. தமிழ் சின்னத்திரையில் சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் என பல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல்களுக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உண்டு. சீரியல்களை ரசிப்பது மட்டுமல்லாமல் சீரியல்களில் நடிக்கக்கூடிய நடிகர் நடிகைகளும் சினிமா நடிகர்களை விட ரசிகர்கள் மத்தியில் அதிக அளவு பேமஸ் ஆகி விடுகிறார்கள். பொதுவாகவே மக்களுக்கு பிடித்த சீரியல் நடிகர்கள் மற்றும் நடிகைகள் அன்றாடம் வாழ்க்கையில் நடக்க கூடியதை தினம்தோறும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

அதன்படி பல சீரியல்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் சீரியல் நடிகர் சத்யராஜா. தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மௌனம் பேசியதே சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இந்த சீரியல் சமீபத்தில் ஒளிபரப்பாக தொடங்கிய நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் சத்யா ராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

இப்படியான நிலையில் தனது மனைவி ராஜேஸ்வரி கர்ப்பமாக இருக்கும் செய்தியை சத்யா ராஜா வெளியிட்டுள்ளார். இவர் ராஜேஸ்வரி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு ஏற்கனவே ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இப்படியான நிலையில் இவர் மூன்றாவதாக கர்ப்பமாகியுள்ளதால் தனது இரண்டு குழந்தைகள் மற்றும் மனைவியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வர ரசிகர்கள் பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

