பிரபல நடிகரான பார்த்திபன் புதிய பாதை திரைப்படத்தில் நடித்த போது அவருக்கும் நடிகை சீதாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. பெற்றோர் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினர் இரண்டு மகள்கள் இருக்கின்றனர். அதன்பிறகு கருத்து வேறுபாடு காரணமாக சீதா பார்த்திபனை விட்டு பிரிந்து விட்டார். கடந்த 2010-ஆம் ஆண்டு தனது 43 வயதில் சின்னத்திரை நடிகரான சதீஷை சீதா இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

தனக்கு ஒரு துணை வேண்டும் என்பதற்காக இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாகவும் சதீஷ் என் வாழ்க்கையில் வந்தது சந்தோஷமாக இருக்கிறது எனவும் சீதா ஒரு முறை கூறியதாக இணையத்தில் செய்திகள் வந்தது. அதன்பிறகு ஒரு சில ஆண்டுகளில் இரண்டாவது கணவர் சதீஷையும் சீதா பிரிந்துவிட்டார். இந்த நிலையில் சதீஷ் தெலுங்கு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, நான் சீதாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டேன். பார்த்திபனிடமிருந்து நான் தான் சீதாவை பிரித்தேன் என ஊடகங்களில் செய்திகள் உலா வருகிறது. சொல்லப்போனால் நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள்.

அதுதான் உண்மை. நாங்கள் ஒன்றாக வாழ்ந்தோம், விவாகரத்து பெற்று பிரிந்து விட்டோம் என்று சொல்வதெல்லாம் உண்மை கிடையாது. சினிமா வட்டாரத்திலும் சின்னத்திரையிலும் எங்களுடன் நடித்த நடிகர்களுக்கு அது தெரியும். சீதாவுடன் நான் நடித்துக் கொண்டிருந்த போதே பார்த்திபனுக்கும் அவருக்கும் விவாகரத்து ஆகிவிட்டது. சீதாவால்தான் என் மனைவி பிரிந்து சென்றதாக கூறுகின்றனர். அப்படி எல்லாம் கிடையாது. எனக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். என் மனைவி இரண்டு மகன்களையும் அழைத்துக் கொண்டு சென்று விட்டார்.

என்னைவிட அவர்களை என் மனைவி நன்றாக பார்த்துக் கொள்வார். அந்த நம்பிக்கை தான் நான் அவர்களை தொந்தரவு செய்யவில்லை. சீதாவை பொருளாதார ரீதியாக ஏமாற்றி விட்டேன் என்றெல்லாம் சொல்வது ஆதாரம் இல்லாமல் பேசும் செயல். அந்த செய்தியை பரபரப்பாக்க என்பதற்காக அப்படி எழுதுகிறார்கள். நானும் சீதாவும் நல்ல நண்பர்கள் மட்டும்தான். என் வீட்டில் ஏதாவது விசேஷம் என்றால் சீதா வருவார். அதே போல நாங்கள் நல்ல நட்புடன் தான் இருக்கிறோம் என சதீஷ் கூறியுள்ளார்.

