Categories: சினிமா

‘கவுண்டமணியிடம் எங்க அப்பா அடிவாங்கும்போது அவர எதாவது செய்யணும்னு தோணும்’..  செந்திலின் மகன் பகிர்ந்த எமோஷனல் பதிவு!

Spread the love

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக கவுண்டமணியோடு இணைந்து வெற்றிகரமாக வலம் வந்தவர் செந்தில். அவர்கள் இருவரும் இணைந்து நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நடித்துள்ளனர். முதலில் சினிமாவில் நடிக்க வேண்டும் என்றெல்லாம் செந்தில் ஆசைப்படவில்லை. நாடகங்களில் கிடைக்கும் வேலைகளை செய்து வந்துள்ளார்.

அப்போது அவரின் வெகுளித்தனம் மற்றும் உடல்வாகு ஆகியவற்றை வைத்து சுற்றி இருப்பவர்கள் எல்லாம் காமெடியாக அவரை கேலி செய்வார்களாம். அதைப் பார்த்து பாக்யராஜ் தன்னுடைய படங்களில் அவருக்கு முக்கியமான வேடங்களைக் கொடுத்தார். தூறல் நின்னு போச்சு படத்தில் அவருக்கு முக்கிய வேடம் கொடுத்த போது நன்றி சொல்லி கண்ணீர் விட்டு அழுதாராம்.

கவுண்டமணியோடு அவர் உதயகீதம் மற்றும் வைதேகி காத்திருந்தாள் போன்ற இணைந்து நடித்த போது அந்த இணையின் மீதான கவனம் ரசிகர்கள் மேல் விழ ஆரம்பித்தது. அதன் பின்னர் கரகாட்டக்காரனில் உச்சம் தொட்டது அவர்களின் நகைச்சுவை. இருவரும் இணைந்து நடித்தாலும் சம்பளத்தைப் பொறுத்தவரை கவுண்டமணிக்குதான் அதிகமாக தயாரிப்பாளர்கள் கொடுப்பார்களாம்.

கவுண்டமணி செந்தில் கூட்டணி நகைச்சுவையில் பெரும்பாலான காட்சிகள் கவுண்டமணி செந்திலை அடிப்பது போலதான் உருவாக்கப்பட்டிருக்கும். அந்த காட்சிகள்தான் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்ததால் அப்படியே இருவரும் தொடர்ந்தனர். இந்த காட்சிகள் குறித்து செந்திலின் மகனும் மருத்துவருமான மணிகண்ட பிரபு எமோஷனலான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில் “என்  அப்பா பெரும்பாலும் கவுண்டமணி மாமாவிடம் அடி வாங்குவது போல் தான் பெரும்பாலான காட்சிகளில் நடித்திருப்பார். அதை என் சிறு வயதில் சினிமாவில் பார்க்கும் போது கவுண்டமணி அவர்கள் மேல் கோபமாக வரும். அவரை எதாவது செய்ய வேண்டும் என்று தோன்றும். ஆனால் வளர்ந்த பின்பு அவர்கள் இருவரும் நடிப்பதைப் பார்த்து ரசிக்க ஆரம்பித்து விட்டோம்  அவர்கள் திரைக்கு வெளியே நல்ல நண்பர்கள்தான்” எனக் கூறியுள்ளார்.

 

vinoth

Recent Posts

“மாயமான சிறுமி…” கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்… கழுத்தை அறுத்து போட்டு சென்ற கொடூரம்… நடுங்க வைக்கும் வைரல் வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிரோசாபாத் மாவட்டத்தில், தலித் சிறுமி ஒருவர் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, அதன்பின் கொல்லும் நோக்கில் கழுத்து அறுக்கப்பட்ட…

49 minutes ago

“ஆசையாக வளர்ந்த ஒரே மகள்…” அமெரிக்காவில் மாயமான மாணவி… கடற்கரை அருகே சிக்கிய செல்போன் சிக்னல்…! பகீர் சம்பவம்…!!

அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வந்த தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது மாணவி திடீரென மாயமான சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே…

1 மணத்தியாலம் ago

திக் திக் நிமிடங்கள்…! ஓடி வந்து விபத்தில் சிக்கிய சிறுமி… ஓட்டுனரை தள்ளிவிட்டு பிள்ளையை தூக்கிய தாய்… இணையத்தில் விவாதத்தை கிளப்பிய வைரல் வீடியோ…!!

குழந்தைகளைக் கண்காணிக்கத் தவறிவிட்டு, அனைத்துத் தவறுக்கும் மற்றவர்கள் மீது பழிபோடும் தற்காலப் பெற்றோரின் பொறுப்பற்ற போக்கு குறித்து சமூக வலைதளங்களில்…

1 மணத்தியாலம் ago

“6 அடி 8 அங்குல உயரமான கணவர்…” ஏர் இந்தியா விமான கழிவறையில் படும் பாடு… கலாய்க்கும் நெட்டிசன்கள்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

ஏர் இந்தியா விமானத்தில் 6 அடி 8 அங்குல உயரம் கொண்ட நபர் கழிவறையைப் பயன்படுத்தும் போது படும் சிரமங்களை…

1 மணத்தியாலம் ago

78 வயதில் இப்படியா..? மிரட்டி விட்டுடாங்க…! ‘ராஸ்புடின்’ பாடலைப் பாடி அரங்கைக் அதிரவைத்த உஷா உதுப்… உற்சாகத்தில் ரசிகர்கள்… வைரலாகும் வீடியோ…!!

வயது வெறும் எண் மட்டுமே என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையில், 78 வயதான பிரபல மூத்த பாடகி உஷா…

2 மணத்தியாலங்கள் ago

“அந்த சிரிப்பை பாருங்க…” மாற்றுத்திறனாளியின் தன்னம்பிக்கையை கண்டு வியந்துபோன நெட்டிசன்கள்… இணையத்தில் தீயாய் பரவும் நெகிழ்ச்சி வீடியோ…!!

மும்பை வீதிகளில் மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு, எவ்விதச் சோர்வுமின்றி உற்சாகமாகச் சொமேட்டோ உணவு விநியோகம் செய்துவரும் மாற்றுத்திறனாளி…

2 மணத்தியாலங்கள் ago