தமிழகத்தில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) கட்சியின் ஆட்சியைத் கவிழ்க்கும் நோக்கில், அக்கட்சியின் ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ இளையராஜாவிடம் சுமார் ரூ. 35 கோடி பேரம் பேசி, சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க முயன்றதாகப் புகார் எழுந்தது. இச்சம்பவம் தொடர்பாகத் திருவல்லிக்கேணி போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இந்த குதிரை பேர சதியின் பின்னணியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோர் இருப்பதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களை விசாரணைக்கு ஆஜராகக் கோரி போலீஸார் சம்மன் அனுப்பியிருந்த நிலையில், இருவரும் நேற்று (ஜூலை 6) ஆஜராகாமல் கடந்த 6 நாட்களாகத் தலைமறைவாகியுள்ளனர். இதையடுத்து, அவர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதைத் தடுக்க சென்னை காவல்துறை ஏற்கனவே ‘லுக் அவுட்’ (Look Out Circular) நோட்டீஸ் விடுத்துள்ளதோடு, அவர்களைக் கைது செய்யத் தனிப்படைகள் அமைத்துத் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. இதனிடையே, இவ்வழக்கில் கைதான 9 பேரில் 6 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவின் மீதான விசாரணை இன்று நடைபெறவுள்ளதால், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பும் எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.
உத்தராகண்ட் மாநிலத்தில் கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் இனோவா கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர்…
ராஜஸ்தான் மாநிலத்தில் தீவிரமடைந்து வந்த குடும்பக் கடன் சுமையை சமாளிப்பதற்காக, வீட்டில் வளர்த்து வந்த பசுவை விற்க கணவர் எடுத்த…
சீனாவில் 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகையே உலுக்கிய ஒன்றரை வயதுக் குழந்தை மீதான கொடூரத் தாக்குதல் சம்பவம் குறித்த விவரங்கள்…
பெங்களூரு யெலஹங்கா பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் செவ்வாய்க்கிழமை அன்று அதிர்ச்சியூட்டும் கொலைச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. கேரள மாநிலத்தைச்…
பத்ராவதியின் நாகசேனா நகரில் பயிற்சி வகுப்பு முடிந்து மிதிவண்டியில் வீடு திரும்பிய 8 வயது சிறுவன் மீது, 17 வயது…
ஹோட்டலின் ஏழாவது மாடியில் எதிர்பாராதவிதமாக நடந்த இந்த சோக சம்பவம், அனைவரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 26 வயதான ரிஹானா என்ற…