கோவையில் என்ன நடக்குது?…. அரசியலை அதிர வைக்கும் செந்தில் பாலாஜியின் சைலன்ட் மூவ்…. அதிர்ச்சியில் அறிவாலயம்…..!

Spread the love

கடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தில் மேற்கு மண்டலத்தில் அசைக்க முடியாத சக்தியாக வலம் வந்த செந்தில் பாலாஜி, 2026 சட்டமன்றத் தேர்தலில் கோவையில் போட்டியிட்டு வெற்றி பெற்றாலும், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கோவையை முற்றிலுமாகப் புறக்கணிப்பதாகக் கட்சியினரிடையே கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆட்சியில் இருந்தவரை கரூருடன் சேர்த்து கோவையையும் தன் முழு கட்டுப்பாட்டில் வைத்திருந்த அவர், ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு கடந்த ஆறு மாதங்களாகக் கோவை பக்கம் தலைகாட்டவில்லை என்பது தொண்டர்களின் முக்கியப் புலம்பலாக உள்ளது.

தேர்தல் காலத்தில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் குடியேறி தீவிர பிரச்சாரம் மேற்கொண்ட அவர், வெற்றிக்குப் பிறகு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கக் கூட தொகுப்பிற்கு முறையாக வரவில்லை என்று கூறப்படுகிறது. தான் வெற்றி பெற்ற கோவை தெற்கு தொகுதியில் ஒவ்வொரு வார்டிலும் அலுவலகம் அமைப்பதாக அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றாததுடன், தற்போது கட்சி சார்பில் நடத்தப்படும் மாவட்டச் செயற்குழு மற்றும் மறுசீரமைப்பு ஆலோசனைக் கூட்டங்களையும் திட்டமிட்டே புறக்கணித்து வருவதாகப் புகார்கள் வலுத்துள்ளன.

தற்போதைய அரசியல் சூழலில் புதிய கட்சி அரசின் சட்ட நடவடிக்கைகளில் இருந்து தற்காத்துக் கொள்ளச் சில காலம் ஒதுங்கியிருந்த அவர், ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் தீவிர அரசியலுக்குத் திரும்பியுள்ள போதிலும், கோவை மாவட்ட விவகாரங்களில் ஆர்வம் காட்டாமல் இருப்பது தி.மு.க. வட்டாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கோவையில் நியமிக்கப்பட்ட புதிய பொறுப்பாளர்கள் தன்னை மீறிச் செயல்படுவதையும், தனது பரிந்துரைகளை அவர்கள் ஏற்க மறுப்பதையும் செந்தில் பாலாஜி விரும்பவில்லை என்பதால் தான் அவர் கோவையைத் தவிர்ப்பதாகக் கட்சியினர் வெளிப்படையாகக் குமுறுகின்றனர்.

ஆட்சியில் இருந்தபோது கோவையின் ஒட்டுமொத்த அதிகார மையமாகத் திகழ்ந்த செந்தில் பாலாஜி, தேர்தல் தோல்விக்குப் பின் கோவையைத் கைகழுவி விட்டதாகக் கூறப்படும் இந்தக் குற்றச்சாட்டுகள் மேற்கு மண்டல தி.மு.க. அரசியலில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன. கட்சி மறுசீரமைப்புப் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், கோவையின் மூத்த தலைவரான செந்தில் பாலாஜியின் இந்த ஒதுங்கியிருக்கும் போக்கு, வரும் காலங்களில் தி.மு.க.வின் பலத்தை மேற்கு மண்டலத்தில் எந்தளவுக்குப் பாதிக்கும் என்ற கேள்தியை எழுப்பியுள்ளது.

Nanthini

Recent Posts

மின்னல் வேகத்தில் மோதிய பிக்கப் வேன்…! பைக்கில் சென்ற பெண் துடிதுடித்து பலி… தம்பதி படுகாயம்…. நெஞ்சை உலுக்கும் திக் திக் வீடியோ….!!

உத்திரப்பிரதேச மாநிலம் பதாவுன் பகுதியில், மருத்துவமனைக்குச் சென்றுவிட்டு பைக்கில் குடும்பத்தினருடன் திரும்பியவர்கள் மீது அதிவேகமாக வந்த பிக்கப் வேன் மோதிய…

7 minutes ago

நூடுல்ஸ், ஐஸ்கிரீம்  சாப்பிட்ட உடனே மயக்கம்…! கோவில் திருவிழாவுக்குச் சென்ற சிறுமி பரிதாப சாவு… கதறும் குடும்பத்தினர்…. பகீர் சம்பவம்…!!

உத்திரப்பிரதேச மாநிலம் எட்டாவ் பகுதியில், சாமுண்டா கோவிலுக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய 14 வயது மாணவி பவானா, நூடுல்ஸ், ஐஸ்கிரீம் மற்றும்…

16 minutes ago

“ஒவ்வொரு மணி நேரமும் போன் போட்டு விசாரிப்பேன்”….. முதலமைச்சரின் உத்தரவும், அமைச்சரின் அதிரடி ஸ்பீடும்….!

மழைக்கால பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் என்.ஆனந்த், நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், ஒவ்வொரு…

58 minutes ago

“என்னிடம் 100 ஆடியோ ஆதாரங்கள் இருக்கு”…. விஜய்க்கு எதிராக மதுரையில் கொதித்தெழுந்த நிர்வாகி…. தவெகவில் வெடித்த அடுத்தடுத்த பரபரப்பு….!

தமிழக வெற்றிக் கழகத்தில் கட்சிப் பதவிகளை வழங்குவதற்காகப் பணம் பெறப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் மதுரை அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை…

1 மணத்தியாலம் ago

விமான நிலையத்தில் ரூ.1 லட்சம் சம்பளம்…. ரூ.23 லட்சத்தை அப் அங் கையாண்ட ஓய்வுபெற்ற பெண் அதிகாரி…. சென்னையை நடுநடுங்க வைத்த சம்பவம்….!

சென்னை விமான நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.23 லட்சம் மோசடி செய்த ஓய்வுபெற்ற பெண் அதிகாரி கைது…

2 மணத்தியாலங்கள் ago

“13 லட்சம் ஃபாலோயர்கள்… திடீர் விபரீதம்”…. ‘பைனான்ஸ் வித் ஹரிஷ்’ மரணத்தின் பின் உள்ள அதிர்ச்சி உண்மை….!

இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் மூலம் 'பைனான்ஸ் வித் ஹரிஷ்' என்ற பெயரில் நிதி ஆலோசனைகளை வழங்கி வந்த பிரபல இன்ஃப்ளூயன்ஸர்…

2 மணத்தியாலங்கள் ago