கோவை மாவட்ட திமுகவில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள், கொங்கு மண்டல உடன்பிறப்புகளிடையே பெரும் அதிர்வலைகளையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தலையீட்டின் பேரில் இந்த சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வரும் சூழலில், அவரது உதவியாளர் சங்கர் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு அதிகளவில் அழுத்தம் கொடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. ‘நாங்கள் சொல்வது போல்தான் மாவட்டங்களைப் பிரிக்க வேண்டும், நாங்கள் கை காட்டும் நபர்களுக்கே முக்கியப் பொறுப்புகளை வழங்க வேண்டும்’ என அவர் பிடிவாதம் காட்டுவது உள் கட்சிப் பூசலை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. செந்தில் பாலாஜியின் தீவிர ஆதரவாளர்களுக்கே மீண்டும் மீண்டும் பதவிகளை தாரை வார்ப்பது, காலம் காலமாக கட்சிக்காக உழைத்த பாரம்பரிய கொங்கு திமுகவினரை கடுமையாகக் காயப்படுத்தியுள்ளது.
கட்சியின் சீனியர்களை புறந்தள்ளிவிட்டு, மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்களுக்கும் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களுக்கும் மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுவது வரும் தேர்தலில் கோவை மாவட்டத்தில் கட்சியின் வெற்றியைப் பாதிக்கும் என மூத்த நிர்வாகிகள் புலம்பி வருகின்றனர். தேர்தல் களத்தில் கோவை மண்டலம் எப்போதும் திமுகவிற்கு சவாலான ஒன்றாகவே இருந்து வரும் நிலையில், இந்த உட்கட்சிப் பூசல் மேலும் பின்னடைவையே தரும். எனவே, மு.க.ஸ்டாலின் உடனடியாக இதில் தலையிட்டு, தனிநபரின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே உண்மையான உடன்பிறப்புகளின் எதிர்பார்ப்பாகும். கள நிலவரத்தையும் உண்மையான தொண்டர்களின் கொந்தளிப்பையும் உணர்ந்து ஸ்டாலின் இந்த விவகாரத்தில் நியாயமான முறையில் சீரமைப்பைச் செய்து சரிசெய்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பிய மறுநாளே, மனைவியின் மீது கள்ளத்தொடர்பு சந்தேகம் கொண்டு அவரைக் கத்தியால் குத்திக்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் கோயிலுக்கு வரும் சிறுமிகளிடம் பிரசாதம் தருவதாகக் கூறி பாலியல் தொல்லை கொடுத்து, அதனை வீடியோவாகப் பதிவு…
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் மதுபோதையில் வீட்டிற்குள் புகுந்து பெண்களிடம் தவறாக நடக்க முயன்ற 25 வயது இளைஞரை, பெண்களின் உறவினர்கள்…
குஜராத் மாநிலம் சூரத் நகரில் அஜ்மல் மற்றும் ஃபைசான் என்ற இரு சிறுவர்கள் கத்தியால் தாக்கப்பட்டு உயிரிழந்த துயர சம்பவம்…
உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்திலுள்ள ஜலால்பூர் சோயா கிராமத்து வயல்வெளியில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நாணல் புதர்களுக்கு நடுவே…
பெங்களூரு இந்திரா நகர் 100 அடி சாலையில் உள்ள பிரபல ஷூ மற்றும் பேக் பழுதுபார்க்கும் கடையில் 23 வயதான…