சிவகாசி கோயில் காவலாளி அஜித் குமார் சந்தேகத்திற்கு இடமான முறையில் மரணமடைந்த வழக்கில், மானாமதுரை காவல்துறை துணைத் கண்காணிப்பாளர் (DSP) சண்முக சுந்தரம் உட்பட நான்கு காவல்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் வெளியில் இருந்தால் வழக்கின் சாட்சிகளைக் கலைக்கக்கூடும் என சிபிஐ வைத்த வலுவான வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், நான்கு பேரையும் வரும் செப்டம்பர் 16-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட உயர் அதிகாரி உள்ளிட்ட நான்கு பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம், காவல்துறை வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
