சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர் ஆறு மாவட்டங்களை உள்ளடக்கிய மேற்கு மண்டலத்தில் உள்ள 39 சட்டமன்ற தொகுதிகளில் பொறுப்பாளராக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டார். பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதால் ஆறு மாவட்டங்களிலும் செந்தில் பாலாஜி சொல்வதை முக்கிய பங்கு வகிக்கும் என நம்பிக்கை தொண்டர்களிடம் நிலவுகிறது. இதனால் நிர்வாகிகள் செந்தில் பாலாஜியின் பிறந்தநாளை போட்டி போட்டு கொண்டாடுகின்றனர்.
சமூக வலைதளங்களில் ரிலீஸ், போஸ்டர்கள், நலத்திட்ட உதவிகள் என அவரது பிறந்த நாளை விமர்சையாக கொண்டாடியுள்ளனர். கொங்கு மண்டல திமுகவில் செந்தில் பாலாஜியின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. இதனால் மூத்த நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனர். ஈரோடு மாவட்ட திமுக முன்னாள் அமைச்சரும் மூத்த நிர்வாகியுமான என். கே.கே.பி ராஜா, செந்தில் பாலாஜி பிறந்த நாளை முன்னிட்டு ஒட்டப்பட்ட போஸ்டரை வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் வைத்து “ஏன்டா மானங்கெட்டு திரிகிறீர்கள்.
ஜெயிக்க சொல்லுங்கடா பார்க்கலாம். இதுக்கு கூட ரோசம் வரலைன்னா அப்புறம் எதுக்குடா கருப்பு சிவப்பு கொடி கட்டுறீங்க. மனுஷனா திமுக காரனா இருக்கணும்னு யோசிங்க. ரொம்ப அசிங்கமா போகுது” என காட்டமாக வாய்ஸ் மெசேஜை வெளியிட்டார். மேலும் செய்தியாளர்களிடம் பேசிய என்.கே.கே.பி ராஜா “எங்கள் குடும்பம் பாரம்பரிய திமுக குடும்பம்.
திமுகவின் எந்த நிகழ்விலும் பெரியார், அண்ணா, கலைஞர், பேராசிரியர், தளபதி படங்கள் கட்டாயம் இடம்பெற வேண்டும். ஆனால் செந்தில் பாலாஜியை துதிபாடி போஸ்டர் போட்டால் கட்சி பதவிகளும் எம்.எல்.ஏ பதவியும் கிடைத்துவிடும் என நிர்வாகிகள் நம்புகின்றனர். எதிர்கொண்டு கம்பீரமாக வளர்ந்தவர்கள் திமுகவினர். அந்த கம்பீரத்தை சிதைக்கும் வெளியே சம்பந்தப்பட்டவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். இது எனது ஆதங்கம் மட்டுமல்ல கொங்கு மண்டலத்தின் மூத்த நிர்வாகிகள் தொண்டர்களின் ஆதங்கம் என வெளிப்படையாக பேசியுள்ளார்.
