முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சுரேஷ் கல்மாடி (81), உடல்நலக் குறைவு காரணமாக புனேவில் இன்று (2026, ஜனவரி 6) காலமானார். 1995-1996 காலகட்டத்தில் மத்திய அமைச்சராகப் பணியாற்றிய இவர், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (IOA) தலைவராகவும் நீண்ட காலம் பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மறைந்த சுரேஷ் கல்மாடியின் உடல், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக புனேவின் எரண்ட்வானே பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று மதியம் 2 மணி வரை வைக்கப்படுகிறது. அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், விளையாட்டுத் துறை பிரமுகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். இவரது இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
