தமிழகத்தில் அரசியல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் நொடிக்கு நொடி பரபரப்பாகவே உள்ளது. குறிப்பாக அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்தது அரசியல் களத்தை பரபரப்பாக மாற்றி உள்ளது. அதிமுகவின் மூத்த தலைவரான செங்கோட்டையன் விஜய் கட்சியில் இணைந்துள்ளது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் செங்கோட்டையன் இணைந்த அன்று அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட 32 முன்னாள் நிர்வாகிகள் அவருடன் கட்சியில் சேர்ந்தனர். தற்போது புதிய திருப்பாமாக அதில் 12 பேர் அதிமுகவில் மீண்டும் இணைய முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது செங்கோட்டையன் தரப்புக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஆனால் அவர்களை அதிமுகவில் சேர்க்க இபிஎஸ் இதுவரை ஆர்வம் காட்டவில்லை என தெரிகிறது.
