கோபிசெட்டிபாளையம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் வேட்புமனு பரிசீலனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவர் கட்டியுள்ள புதிய வீட்டிற்கு வருமான வரி செலுத்தவில்லை என்றும், அவர் தாக்கல் செய்துள்ள நோட்டரி வழக்கறிஞரின் சான்றிதழ்கள் செல்லாது என்றும் கூறி அதிமுகவினரே (மாற்று அணி) புகார் அளித்துள்ளனர்.
இந்தப் புகார்கள் தொடர்பாக இன்று மாலை 5 மணிக்குள் உரிய விளக்கம் அளிக்குமாறு தேர்தல் நடத்தும் அலுவலர் செங்கோட்டையனுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்தத் திடீர் திருப்பம் அந்தத் தொகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
